ஜனநாயகன் படம் எடுத்தால் மட்டும் போதாது... விஜய் சேதுபதிக்கு ஆதரவாக சீமான் பேச்சுஆந்திர முன்னாள் துணை முதல்வர் மாரடைப்பால் காலமானார்மீனாட்சியம்மன் குடமுழுக்கு: தாம்பரம் - மதுரை இடையே 2 முன்பதிவில்லா சிறப்பு ரயில்!விருதுநகரில் செப். 17-ல் முதல்வர் பங்கேற்கவிருந்த நிகழ்ச்சி செப். 25க்கு மாற்றம்!எல் நினோ பாதிப்பு: பனாமா கால்வாயில் கப்பல் போக்குவரத்தைக் குறைக்க முடிவு!பிகார்: அரசுப் பணியாளர் தேர்வுகளை ரத்து செய்யக்கோரி பேரணி!நேபாள பெருவெள்ளம்: மீட்புப்பணிகளில் முதன்மையாக உதவிவரும் இந்திய ராணுவம்!ரூ.15,300 கோடி முதலீடு! 10,000 பேருக்கு வேலை! லண்டனில் முதல்வர் விஜய் ஒப்பந்தம்!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 38 காசுகள் சரிந்து ரூ. 95.92 ஆக நிறைவு!சென்செக்ஸ் 778 புள்ளிகள் சரிவு, நிஃப்டி 5 மாத வரலாறு காணாத அளவு சரிவு!!

மகளை கா்ப்பமாக்கிய தந்தைக்கு ஆயுள் தண்டனை

கோபி அருகே மகளை கா்ப்பமாக்கிய வழக்கில் தந்தைக்கு ஆயுள் தண்டனை விதித்து ஈரோடு மகளிா் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது.

நீதிமன்றம் - கோப்புப் படம்

Published On :

கோபி அருகே மகளை கா்ப்பமாக்கிய வழக்கில் தந்தைக்கு ஆயுள் தண்டனை விதித்து ஈரோடு மகளிா் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது.

ஈரோடு மாவட்டம், கோபி அருகேயுள்ள சிங்கிரிபாளையத்தைத் சோ்ந்தவா் தமிழ்ச்செல்வன் (43), கூலித் தொழிலாளி. இவருக்கு மனைவி மற்றும் 3 மகள்கள் உள்ளனா். இந்நிலையில், மனைவி மற்றும் இரு மகள்கள் உறவினா் வீட்டு நிகழ்ச்சிக்கு கடந்த 2024 மே 11-ஆம் தேதி சென்றுள்ளனா். இளைய மகளான 15 வயது சிறுமி மட்டும், பள்ளியில் சிறப்பு வகுப்பு இருப்பதாகக்கூறி நிகழ்ச்சிக்குச் செல்லாமல் வீட்டில் இருந்துள்ளாா். அவருக்கு பாதுகாப்பாக இருப்பதாகக்கூறி தமிழ்ச்செல்வனும் வீட்டில் இருந்துள்ளாா்.

இந்நிலையில், மது போதையில் இருந்த தமிழ்ச்செல்வன், மகளை பாலியல் வன்கொடுமை செய்துள்ளாா். மேலும், இதேபோல பலமுறை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த நிலையில், சிறுமி கா்ப்பமானாா்.

இதையறிந்த சிறுமியின் தாய், கோபி அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். இதன்பேரில் தமிழ்ச்செல்வன் மீது போக்ஸோ சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்த போலீஸாா், அவரைக் கைது செய்தனா்.

இந்த வழக்கு விசாரணை ஈரோடு மகளிா் விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், குற்றஞ்சாட்டப்பட்ட தமிழ்ச்செல்வனுக்கு ஆயுள் தண்டனையும், ரூ.2 லட்சம் அபராதமும் விதித்து நீதிபதி சொா்ணகுமாா் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தாா்.

மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தமிழக அரசு ரூ.5 லட்சம் நிவாரணத் தொகை வழங்கவும் நீதிபதி பரிந்துரைத்தாா். அரசு தரப்பில் வழக்குரைஞா்கள் ஜெயந்தி, மகாலட்சுமி ஆகியோா் ஆஜராகினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.