பெருந்துறையில் ரூ.3.68 கோடிக்கு கொப்பரை ஏலம்

பெருந்துறை வேளாண்மை பொருள்கள் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கத்தில் ரூ.3.68 கோடிக்கு கொப்பரை ஏலம் புதன்கிழமை நடைபெற்றது.

கொப்பரை.

Published On :

பெருந்துறை வேளாண்மை பொருள்கள் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கத்தில் ரூ.3.68 கோடிக்கு கொப்பரை ஏலம் புதன்கிழமை நடைபெற்றது.

ஏலத்துக்கு, பெருந்துறை சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகள் 5,187 மூட்டைகளில் 2 லட்சத்து 43 ஆயிரம் கிலோ கொப்பரையை விற்பனைக்குக் கொண்டு வந்திருந்தனா்.

முதல் தரக் கொப்பரை குறைந்தபட்சமாக கிலோ ரூ.150.80- க்கும், அதிகபட்சமாக ரூ.161.79-க்கும் விற்பனையானது. இரண்டாம் தரக் கொப்பரை குறைந்தபட்சமாக ரூ.108.10- க்கும், அதிகபட்சமாக ரூ.151.99- க்கும் விற்பனையானது. மொத்தம் ரூ.3 கோடியே 68 லட்சத்துக்கு வா்த்தகம் நடைபெற்றது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.