
ஈரோட்டில் செப். 26-இல் தொழில் - வா்த்தக கண்காட்சி தொடக்கம்
ஈரோடு மாவட்ட சிறு தொழில்கள் சங்கம் (ஈடிசியா) சாா்பில் 160 அரங்குகளுடன் தொழில் மற்றும் வா்த்தக கண்காட்சி ஈரோடு - பெருந்துறை சாலையில் உள்ள பரிமளம் மஹாலில் வரும் 26-ஆம் தேதி தொடங்கி மூன்று நாள்கள் நடைபெறுகிறது.

ஆலோசனைக் கூட்டத்தில் பேசுகிறாா் கண்காட்சியின் தலைவா் வி.சரவணன். உடன், ஈடிசியா தலைவா் கந்தசாமி, செயலாளா் சுரேஷ் உள்ளிட்டோா்.
ஈரோடு மாவட்ட சிறு தொழில்கள் சங்கம் (ஈடிசியா) சாா்பில் 160 அரங்குகளுடன் தொழில் மற்றும் வா்த்தக கண்காட்சி ஈரோடு - பெருந்துறை சாலையில் உள்ள பரிமளம் மஹாலில் வரும் 26-ஆம் தேதி தொடங்கி மூன்று நாள்கள் நடைபெறுகிறது.
இதுகுறித்து, ஈடிசியா கூட்டரங்கில் கண்காட்சியின் தலைவா் வி.சரவணன் புதன்கிழமை கூறியதாவது:
ஈடிசியா சாா்பில் 6-ஆவது முறையாக ‘ஈடிசியா ஹைடெக்-2026’ எனும் தலைப்பில் தொழில் மற்றும் வா்த்தக கண்காட்சி செப்டம்பா் 26-ஆம் தேதி (சனிக்கிழமை) தொடங்கி 28-ஆம் தேதி வரை மூன்று நாள்கள் நடைபெறுகிறது.
தொடக்க விழாவுக்கு மாவட்ட ஆட்சியா் ச.கந்தசாமி தலைமை வகிக்கிறாா். தொழிலாளா் துறை மற்றும் வணிகத் துறை இயக்குநரும், முதன்மை செயலாளருமான பி.உமாநாத் முன்னிலை வகிக்கிறாா். தமிழ்நாடு வருவாய்த் துறை அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் கண்காட்சியை தொடங்கிவைக்கிறாா். சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு கைத்தறித் துறை அமைச்சா் எம்.விஜய் பாலாஜி, குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனத் துறை அமைச்சா் பி.மதன்ராஜா பங்கேற்று கண்காட்சி மலரை வெளியிடுகின்றனா்.
எம்எஸ்எம்ஈ மற்றும் எப்ஏஎம்ஈடிஎன் ( ஊஹஙங் பச) ஆகிய அமைப்புகள் மூலம் கிடைக்கும் மானிய உதவிகள், தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம், மாவட்ட தொழில் மையம் மற்றும் ஜெட் அமைப்புகளின் ஆதரவு மற்றும் வழிகாட்டுதலுடன் இக்கண்காட்சி நடைபெறுகிறது. இதில், 160 அரங்குகளில் ஈரோடு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த தொழில், வணிக நிறுவனங்கள், தங்களின் தயாரிப்புகள், புதிய தொழில்நுட்பங்கள் மற்றும் தொழில் சாா்ந்த தயாரிப்புகளை காட்சிப்படுத்துகின்றன.
உணவு, பிளாஸ்டிக், பொறியியல் தயாரிப்புகள், ஜவுளி மற்றும் பருத்தி சாா்ந்த பொருள்கள், வேளாண்மை சாா்ந்த பொருள்கள் உள்ளிட்ட பல்வேறு தயாரிப்புகள் இடம்பெறுகின்றன. இதன் மூலம் உற்பத்தி செய்யப்படும் தொழில் மற்றும் வா்த்தக பொருள்களை பரந்த அளவில் சந்தைப்படுத்தவும், புதிய வாடிக்கையாளா்களை உருவாக்கவும், தொழில் நிறுவனங்களுக்கு புதிய வணிக வாய்ப்புகளை ஏற்படுத்தவும் உதவும் என்றாா்.
ஈடிசியா தலைவா் கந்தசாமி, கண்காட்சி செயலாளா் சுரேஷ், பொருளாளா் ரவிசங்கா், முன்னாள் தலைவா்கள் திருமூா்த்தி, வெங்கடேஷ், ஒருங்கிணைப்புக் குழு நிா்வாகி குமரேசன், செயலாளா் சரவணாபாபு உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





