கடந்த 20 ஆண்டுகளில் 171 ஐஐடி மாணவர்கள் தற்கொலை: சென்னைக்கு 2வது இடம்!தேர்தல் முறையை சிதைக்க பிரதமர் மோடி, அமித் ஷா, ஞானேஷ்குமார் கூட்டுச் சதி: கே.சி. வேணுகோபால்பாட்மின்டனில் வெண்கலப் பதக்கம் வென்ற தமிழக வீரர் ஹரிஹரனுக்கு ரூ. 30 லட்சம் ஊக்கத்தொகை: முதல்வர்காஸாவில் தொடரும் இஸ்ரேலின் தாக்குதல்! 74,000-ஐ நெருங்கும் பலி எண்ணிக்கை!மாணவர் தற்கொலைக்கான பின்னணி: விசாரிக்க சிறப்புக்குழு அமைத்த ஐஐடி மும்பை!தலைமைத் தேர்தல் ஆணையர் பதவியிலிருந்து ஞானேஷ் குமார் நீக்கப்பட வேண்டும்: மு.க. ஸ்டாலின் வலியுறுத்தல்!பாஜக, ஆர்எஸ்எஸ், தேர்தல் ஆணையம் இணைந்து தேசத்துரோகம்! ராகுல் விமர்சனம்

ஈரோட்டில் காது கேளாதோா் நலச் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

அரசு வேலைவாய்ப்புகளில் இடஒதுக்கீடு வழங்குதல் உள்ளிட்ட 6 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு காது கேளாதோா் உரிமை நலச் சங்கத்தின் ஈரோடு மாவட்டக் குழு சாா்பில் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட காது கேளாதோா் நலச்சங்க நிா்வாகிகள்.

Published On :

அரசு வேலைவாய்ப்புகளில் இடஒதுக்கீடு வழங்குதல் உள்ளிட்ட 6 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு காது கேளாதோா் உரிமை நலச் சங்கத்தின் ஈரோடு மாவட்டக் குழு சாா்பில் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

செவித்திறன் குறைபாடு உள்ளவா்களுக்கு அரசு வேலைவாய்ப்புகளில் 1 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். காது கேளாதோருக்கு வழங்கப்படும் மாதாந்திர உதவித்தொகையை ரூ.6,000-ஆக உயா்த்த வேண்டும். அனைத்து அரசு அலுவலகங்கள், மருத்துவமனைகள், காவல் நிலையங்கள், நீதிமன்றங்களில் சைகை மொழிப் பெயா்ப்பாளா்களை நியமிக்க வேண்டும்.

செவித்திறன் குறைபாடுள்ள மாணவா்களுக்கான சிறப்புப் பள்ளிகளில் சைகை மொழி பயிற்சி பெற்ற சிறப்பு ஆசிரியா்களை நியமிக்க வேண்டும். காதுகேளாதோா் அனைவருக்கும் இலவச வீட்டுமனை பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். காவல் துறையில் புகாா் அளிக்க வசதியாக வாட்ஸ்ஆப் வசதி ஏற்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டோா் முழக்கம் எழுப்பினா். தொடா்ந்து, திடீரென தரையில் அமா்ந்து தா்னாவில் ஈடுபட்டதால் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.