தமிழக பேரவை முன்பு சத்தியாகிரக போராட்டம்! வாட்டாள் நாகராஜ் அறிவிப்பு! திருவள்ளூர் மருத்துவக் கல்லூரிக்கும் கூடுதலாக 50 மருத்துவ இடங்கள் ஒதுக்கீடு!அண்ணாமலையின் ‘வீ தி லீடர்ஸ்’ திருச்செந்தூர் மாநாடு ரத்து! தவெக அமைச்சரவையில் மார்க்சிஸ்ட் கம்யூ. இடம்பெறுமா? பெ. சண்முகம் பதில்!கர்நாடகத்தில் மேக்கேதாட்டு அணைக்கு ஆதரவாக போராட்டம்! தமிழக பேருந்துகள் நிறுத்தப்பட்டதால் பதற்றம்! எ.வ. வேலுவுக்கு எதிரான தமிழக அரசின் மேல்முறையீடு தள்ளுபடி! - உச்ச நீதிமன்றம் முதல்வர் விஜய்யுடன் மார்க்சிஸ்ட் கம்யூ. மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் சந்திப்பு! நெருக்கடி நிலையில் கலைஞருக்கு ஆதரவாக நின்றவர்! காமராஜருக்கு ஸ்டாலின் புகழாரம்! கல்வித்துறையை முழுக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர மோடி அரசு துடிக்கிறது! மாணிக்கம் தாகூர் ஃபிஃபா உலகக்கோப்பை: இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது ஸ்பெயின் மும்மொழிக் கொள்கைக்கு எதிரான மனுக்கள்: மத்திய அரசு, சிபிஎஸ்இ பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு இந்தியா - பிரிட்டன் வா்த்தக ஒப்பந்தம் இன்றுமுதல் அமல்! யாருக்கு என்ன பலன்? தென் சீனக் கடலை சீனா உரிமை கோர முடியாது: தீா்ப்பாயத்தின் முடிவுக்கு இந்தியா வரவேற்புபாபநாசம் அருகே கோயிலில் எரிந்த விளக்கை அணைத்து எண்ணெய் குடித்த கரடி 2031-க்குள் 20,000 பொது மின்வாகன சாா்ஜிங் நிலையங்கள்: தமிழ்நாடு மின்வாரியம் 16 ஆண்டுகளாகப் பரிதவிக்கும் 11,773 பகுதிநேர ஆசிரியர்கள்!
/

கோவை மீது அரசு தனி கவனம் செலுத்துவதற்கு கொ.மு.க. பெற்ற வாக்குகளே காரணம்

மேட்டுப்பாளையம், செப்.22:சமீபத்தில் நடை பெற்ற நாடாளுமன்ற தேர்தலில் கொங்கு முன் னேற்ற கழகம் பெற்ற 6 லட்சம் வாக்குகள் காரணமாகவே, தமிழக அரசு தற்போது கோவை மீது தனி கவனம்செலுத்துகிறது.   இதையடுத்து, உலகத்த

Updated On :20 செப்டம்பர் 2012, 11:29 pm IST

மேட்டுப்பாளையம், செப்.22:சமீபத்தில் நடை பெற்ற நாடாளுமன்ற தேர்தலில் கொங்கு முன் னேற்ற கழகம் பெற்ற 6 லட்சம் வாக்குகள் காரணமாகவே, தமிழக அரசு தற்போது கோவை மீது தனி கவனம்செலுத்துகிறது.

  இதையடுத்து, உலகத்தமிழர் மாநாடு, கள் இறக்க ஆலோசணை கமிட்டி, சாயகழிவுநீர் பிரச்னைக்கு தீர்வு, பின்னாலாடை தொழிலுக்கு புதியஅறிவிப்பு போன்ற பல்வேறு திட்டங்களை அரசு மேற்கொண்டு வருவதாக கொ.மு.க. மாநில பொதுசெயலர் ஈ.ஆர். ஈஸ்வரன் தெரிவித்தார்.

  மேட்டுப்பாளையத்தில் சிறப்பான நற்காரியங்களை செய்துவரும் அனைத்து இந்து சமுதாய சங்கத்தின் தலைவர் சி.பொன்னுசாமியின் பொதுசேவைக்காக, சென்னையில் கொங்கு சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.

  இதற்கு பாராட்டு தெரிவிக்கும் வகையில், நகர கொங்கு வேளாள கவுண்டர்கள் பேரவை சார்பில் பாராட்டுவிழா திங்கட்கிழமை நடைபெற்றது.

  விழாவிற்கு பேரவை கெüரவத்தலைவர் ஆறுமுகம் தலைமை தாங்க, பேரவை நிர்வாகிகள் காளியப்பன், ரங்கசாமி, கந்தசாமி,நாட்ராயன், முன்னிலை வகித்தனர்.

 நகர செயலர் வக்கீல் ராஜேந்திரன் வரவேற்றார், விழாவில் கொங்கு சாதனையாளர் விருதை சி.பொன்னுசாமிக்கு வழங்கி, பொதுசெயலர் ஈஸ்வரன் பேசியது:

  சென்னையில், கடந்த 40 ஆண்டுகளுக்கு முன் துவக்கப்பட்ட கொங்கு நண்பர்கள் சங்கம் சார்பில் பொள்ளாச்சி மகாலிங்கம், கிருஷ்ணராஜ் வானவராயர் போன்ற பல்வேறு சாதனையாளர்களும் அழைத்து கெüரவி க்கப்பட்டுள்ளனர்.

 அந்தவரிசையில் மேட்டுப்பாளை யம் சி. பொன்னுசாமியும் கெüரவிக்கப்பட்டிருப்ப து பெருமைக்குரியது. ஒரு சாதிஅமைப்பை நடத்தி செல்வதே பெரும் சவாலாக இருக்கும் இன்றைய சூழ்நிலையில், 36 சாதியினரை ஒருங்கிணைத்து நற்காரியங்களில் ஈடுபடச்செய்து வரும் பொன்னுசாமியின் பணி மகத்தானது.

  வளம்மிக்க கொங்குநாட்டு பகுதிகளிலிருந்து 45 சதவீத வருமானம் அரசிற்கு சென்றாலும், சென்னை நகரில் நிறைவேற்றப்படும் வளர்ச்சிப்பணிகளில் 10 சதவீதம்கூட கொங்குநாட்டில் செயல்படுத்தாதது வருத்தத்திற்குரியது.

  இதற்கு கொங்கு நாட்டிலுள்ள அனைத்து சமுதாயத்தினரு ம் ஒன்றுசேர்ந்து போராடினால், நிச்சயம் தீர்வு காண முடியும் என்றார்.

  விழாவில், கொ.மு.க. மாநில அமைப்பாளர்கள் நந்தகுமார், பொன்னுகுட்டி மாநில தொழிற்சங்க அமைப்பாளர் ராஜாமணி, மாவட்ட பொறுப்பாளர் மோகன்குமார், அனைத்து இந்து சமுதாய சங்க செயலர் பொன்னுசாமி, சட்ட ஆலோசகர் வீரபத்திரன், செயற்குழு உறுப்பினர் கள் வக்கீல் சாந்தமூர்த்தி, நவரத்னமால் உள்ளிட்டோர் வாழ்த்தி பேசினர்.  நகரமன்ற உறுப்பினர் முருகேசன் நன்றி கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.