இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் பந்துவீச்சு மற்றும் பேட்டிங்கில் சிறப்பாக செயல்பட்ட அக்ஷர் படேல் அணியின் வெற்றிக்கு உதவினார்.
இந்தியா - இங்கிலாந்து இடையேயான முதல் ஒருநாள் போட்டி நேற்று (ஜூலை 14) எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் இந்திய அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தியது. பந்துவீச்சு மற்றும் பேட்டிங்கில் சிறப்பாக செயல்பட்ட ஆல்ரவுண்டர் அக்ஷர் படேலுக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது.
இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் அக்ஷர் படேல் பேட்டிங்கில் மிகவும் சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 5 போட்டிகளிலும் விளையாடிய அவர் வெறும் 19 ரன்கள் மட்டுமே எடுத்தார். அவர் 3, 2, 10, 1 மற்றும் 3 ரன்கள் முறையே எடுத்தார்.
இந்த நிலையில், டி20 போட்டிகளில் அதிரடியாக விளையாட நினைத்து ஆட்டமிழந்ததாகவும், நேற்று நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் பந்தினை டைமிங் செய்து விளையாடுவதில் கவனம் கொடுத்ததாகவும் அக்ஷர் படேல் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் பேசியதாவது: இது போன்ற ஆட்டத்தை வெளிப்படுத்துவது மிகவும் முக்கியமானதாக இருந்தது. களத்தில் நிலைத்து நின்று விளையாட வேண்டும் என எண்ணினேன். என் மீது நம்பிக்கை வைத்து என்னுடைய திட்டங்கள் அனைத்தையும் செயல்படுத்தினேன். இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரின்போது, அதிரடியாக விளையாட நினைத்து பந்தினை கடினமாக அடிக்க முயற்சி செய்தேன்.
டெத் ஓவர்களில் களமிறங்கும்போது, உங்களுக்கு பெரிய ஷாட்டுகளை விளையாடுவதைத் தவிர வேறு தெரிவு எதுவும் இல்லை. ஆனால், அப்படி விளையாடியபோது நான் சற்று சரியாக விளையாடவில்லை. அதனால், முதல் ஒருநாள் போட்டியில் நான் பார்ட்னர்ஷிப் அமைப்பதில் கவனம் செலுத்தினேன். அணிக்கு சிறப்பான தொடக்கம் கிடைத்திருக்கையில், அதிரடியாக விளையாட வேண்டும் என்ற அவசியம் ஏற்படவில்லை. பந்தினை டைம் செய்து விளையாடுவதில் கவனம் செலுத்தினேன். விக்கெட்டினை புரிந்துகொண்டு விளையாடினால் நன்றாக ரன்கள் குவிக்க முடியும் என்றார்.
இங்கிலாந்துக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் பந்துவீச்சு மற்றும் பேட்டிங் என இரண்டிலும் சிறப்பாக செயல்பட்ட அக்ஷர் படேல், 4 விக்கெட்டுகள் மற்றும் 52 ரன்கள் எடுத்தார்.
Summary
Axar Patel contributed to the team's victory by performing exceptionally well with both bat and ball in the first ODI against England.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.











