சுய உதவிக் குழுக்களுக்கு ஊக்கத் தொகை: ஊரக வளர்ச்சித் துறைக்கு வெளியிடப்பட்ட அறிவிப்புகள்!தொகுப்பூதிய ஆசிரியர்களின் ஊதியம் ரூ.25,000 ஆக உயர்வு: கலை பண்பாட்டுத் துறைக்கு வெளியிட்ட அறிவிப்புகள்!5 மாதங்களில் 1.95 லட்சம் இன்ஸ்டாகிராம், முகநூல், யூடியூப் கணக்குகள் முடக்கம்! வாகனம் இல்லாத எம்எல்ஏக்களுக்கு முதல்வர் சொந்த செலவில் வாங்கித் தரலாம்! - டிடிவி தினகரன்டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 2 காசுகள் சரிந்து ரூ. 95.76 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை உயர்வு எதிரொலி: நிஃப்டி தொடர்ந்து 7 வது நாளாக சரிவு! 326 புள்ளிகளை இழந்த சென்செக்ஸ்!!ஒரு நபருக்கு 9 சிம் கார்டுகள் மட்டுமே அனுமதி! விதிமுறைகளை கடுமையாக்கிய மத்திய அரசு!
/

நீலகிரியில் தொடங்கியது வன விலங்குகள் கணக்கெடுப்புப் பணி

நீலகிரி மாவட்டத்தில் வன விலங்குகள் கணக்கெடுப்புப் பணி வியாழக்கிழமை தொடங்கியது.

Updated On :24 ஜனவரி 2024, 10:11 pm IST

நீலகிரி மாவட்டத்தில் வன விலங்குகள் கணக்கெடுப்புப் பணி வியாழக்கிழமை தொடங்கியது.

 நீலகிரி வடக்கு வனக்கோட்டத்தில் சுமார் 52,000 ஹெக்டேர் பரப்பளவிலும், நீலகிரி தெற்கு வனக் கோட்டத்தில் 32,000 ஹெக்டேர் பரப்பளவிலும், கூடலூர் வனக்கோட்டத்தில் 11,000 ஹெக்டேர் பரப்பளவிலும் இந்தக் கணக்கெடுப்புப் பணி நடத்தப்படுகிறது. கூடலூர் வனக்கோட்டத்தில் வனத் துறைக்கு சொந்தமான பகுதிகள் மட்டுமின்றி செக்ஷன் 17-க்குள்பட்ட நிலங்களிலும், தனியார் தோட்டங்களிலும் இக்கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது.

 இந்த கணக்கெடுப்புக்காக நீலகிரி வடக்கு வனக்கோட்டம் 82 பகுதிகளாகவும், நீலகிரி தெற்கு வனக்கோட்டம் 32 பகுதிகளாகவும், கூடலூர் வனக்கோட்டம் 26 பகுதிகளாகவும் பிரிக்கப்பட்டுள்ளன. நேரடி பதிவு, நீராதாரங்களில் பதிவு, கால்தடங்கள், ஜிபிஎஸ் கருவியுடன் கூடிய பதிவு உள்பட பல்வேறு நிலைகளாக இந்த கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது.

 இப்பணியில் வனத் துறையினர் மற்றும் தன்னார்வலர்கள் உள்பட சுமார் 250 பேர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இவர்கள் சேகரிக்கும் அனைத்து விவரங்களும் மாவட்ட வன அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்ட பின்னர் விவரங்கள் ஒப்பீடு செய்யப்பட்டு சரிபார்க்கப்படும். அதன்பின்னரே வன விலங்குகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதா போன்ற விவரங்கள் தெரியவரும்.

 உதகையில் தெற்கு வனக்கோட்டத்தில் கேர்ன்ஹில் காப்புக்காட்டுக்கு உள்பட்ட பகுதிகளில் இந்த கணக்கெடுப்புப் பணியை தெற்கு கோட்ட வனச்சரகர் ராஜேஷ் தொடங்கி வைத்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.