எச்.வி. ஹண்டே, எழுத்தாளர் சிவசங்கரி பத்ம ஸ்ரீ விருதை பெற்றுக்கொண்டனர் திரையரங்குகளில் பண்டிகை, விடுமுறை நாள்களில் 5 காட்சிகள்! - முதல்வர் விஜய் அறிவிப்புசிறு விவசாயிகளுக்கு ரூ. 25,000 வரையிலான கடன் தள்ளுபடி: முதல்வர் விஜய்குறு விவசாயிகளுக்கு ரூ. 50,000 வரையிலான பயிர்க் கடன்கள் தள்ளுபடி : முதல்வர் விஜய்குதிரை வேகத்தில் நடக்கும் குதிரை பேரம்! - மு.க. ஸ்டாலின் விமர்சனம்கீழ்தளத்தில் ராஜிநாமா; மேலே கட்சியில் இணைப்பு! தவெகவுக்கு இபிஎஸ் கடும் கண்டனம்!!மின்னல் வேகத்தில் தவெக உறுப்பினர் அட்டை! இது 100% குதிரை பேரம்! - அதிமுக எம்.பி., இன்பதுரை ராஜிநாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் விஜய் உடன் சந்திப்பு!திவிஷா சர்மா வழக்கில் சிபிஐ விசாரணை - உச்ச நீதிமன்றம்அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ராஜிநாமா கடிதம் ஏற்பு: அவைத்தலைவர் ஜேசிடி பிரபாகர்!ராஜிநாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் தவெகவில் ஐக்கியம்!வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் மூவர் ராஜிநாமா!
/

நீலகிரி வனத் துறையின் அதிவிரைவு  செயல் பிரிவு குழுவுக்கு புதிய வாகனங்கள்

நீலகிரி மாவட்டத்திலுள்ள  வனத்துறையின் அதிவிரைவு செயல் பிரிவு  குழுவினரின் பணிகளுக்காக புதிய வாகனங்கள்  அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 

Updated On :18 ஏப்ரல் 2018, 6:54 am IST

நீலகிரி மாவட்டத்திலுள்ள  வனத்துறையின் அதிவிரைவு செயல் பிரிவு  குழுவினரின் பணிகளுக்காக புதிய வாகனங்கள்  அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 
அதிவிரைவு செயல் பிரிவுக் குழுவினர் பணிகளுக்காக  அதி விரைவு வாகனங்கள் 2 வாங்கப்பட்டுள்ளன. இவற்றின் பயன்பாட்டினை மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா  செவ்வாய்க்கிழமை தொடங்கிவைத்தார்.
    நீலகிரி மாவட்ட கூடுதல் ஆட்சியர் அலுவலகத்தில் வனத்துறை சார்பாக நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அவர் பேசியதாவது:
  நீலகிரி மாவட்டத்தில் அதிக அளவு பகுதிகள்  வனப்பகுதியாக  உள்ளன. எனவே,  மனித-  விலங்கு மோதல் மற்றும் பயிர் சேதம் போன்ற பாதிப்புகள் ஏற்பட்டால் உடனடியாக நடவடிக்கை எடுக்க புதிதாக 12 உறுப்பினர்களைக் கொண்ட அதிவிரைவு செயல் பிரிவுக் குழு துவங்கப்பட்டுள்ளது. இதற்காக 0423-2440968 என்ற முழு நேர இலவச தொலைபேசி எண் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 
மேலும்,  2 வாகனங்கள் 24 மணி நேரமும் தயார் நிலையில் உள்ளது. எனவே, பொதுமக்கள் மனித, வன விலங்கு மோதல் மற்றும் பயிர் சேதம் போன்ற பாதிப்புகளிலிருந்து தங்களையும்,  தங்களின் விவசாய நிலங்களையும்  இந்த வாய்ப்பினை பயன்படுத்தி பாதுகாத்து கொள்ளலாம் என்றார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட வன அலுவலர்கள் ராஜ்குமார், கலாநிதி, அரசுத்துறை அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.