மஞ்சூர்-இரியசீகை கிராமத்தில் பலாப் பழங்களை ருசிக்க முகாமிட்டுள்ள காட்டு யானைகளை அடர்ந்த வனப்பகுதிக்கு விரட்ட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
மஞ்சூர் அருகே தமிழக- கேரள எல்லையோரத்தில் இரியசீகை கிராமம் உள்ளது. இக்கிராமத்தில் 100-க்கு மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. மேலும் இப்பகுதியில் அடர்ந்த தேயிலைத் தோட்டம் வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ளது.
ஞாயிற்றுக்கிழமை இரவு, இக் கிராமத்தினுள் 2 காட்டு யானைகள் நுழைந்தன. முதலில் அப்பகுதியில் காய்த்துள்ள பலாப் பழங்களை காட்டு யானைகள் ருசித்தன.
அருகிலுள்ள குடியிருப்புப் பகுதிகளை காட்டுயானைகள் நெருங்கியபோது குடியிருப்பு வாசிகள் தீப்பந்தம் காட்டியும், தப்பட்டை அடித்தும் காட்டு யானைகளை விரட்டும் பணியில் விடியவிடிய ஈடுபட்டனர். இவற்றை வனத் துறையினர் அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் என்று மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.