மருது சகோதரர்களுக்கு வீரவணக்கம்: முதல்வர் விஜய்சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 80 உயர்வு!கனமழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!கனமழை: நீலகிரியில் 6 தாலுகாக்களில் இன்று (அக். 24) பள்ளிகளுக்கு விடுமுறை!தமிழகத்தில் இரு நாள்களுக்கு பலத்த மழை எச்சரிக்கை! அக். 26-இல் புயல் உருவாக வாய்ப்பு!கடன் பத்திரங்கள் மூலம் ரூ. 9,000 கோடி திரட்டுகிறது தமிழக அரசு!அருணாசல் எல்லையில் ரோந்துப் பாதைகளை சீன படைகள் பின்பற்றாததால் பதற்றம்: இந்தியாபாகிஸ்தானில் இந்திய ஆதரவு பயங்கரவாதத்தை ஒழிப்போம்! ராணுவ தலைமைத் தளபதி முனீா்!ரூ. 84,084 கோடிக்கு ‘சமுத்ர மந்தன்’ திட்டம்: கடலுக்கு அடியில் எண்ணெய், எரிவாயு தேட வழிகாட்டுதல்கள் வெளியீடு

தேயிலை பயிரிடப்பட்டுள்ள நிலங்களை வனத் துறையிடம் ஒப்படைக்கக் கூடாது: டான் டீ நிர்வாகத்துக்குக் கோரிக்கை

டான் டீ நிர்வாகம் தற்போது தேயிலை பயிரிட்டுள்ள நிலங்களின் சில பகுதிகளை வனத் துறைக்கு ஒப்படைக்கும் முடிவை கைவிட வேண்டும் என டான் டீ ஏ.ஐ.டி.யூ.சி. தொழிற்சங்கப் பேரவை வலியுறுத்தி உள்ளது.

Updated On :

டான் டீ நிர்வாகம் தற்போது தேயிலை பயிரிட்டுள்ள நிலங்களின் சில பகுதிகளை வனத் துறைக்கு ஒப்படைக்கும் முடிவை கைவிட வேண்டும் என டான் டீ ஏ.ஐ.டி.யூ.சி. தொழிற்சங்கப் பேரவை வலியுறுத்தி உள்ளது.
இந்த சங்கத்தின் பேரவைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில்,  அரசுத் தேயிலைத் தோட்டக் கழகத்தைப் பாதுகாக்க தமிழக அரசு ரூ.39.5 கோடி நிதி ஒதுக்கி உள்ளதற்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. இந்த நிறுவனத்தில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பும், குடியிருக்க சொந்த வீடு வழங்க வேண்டும். தமிழக அரசு வழங்கியுள்ள நிதியைப் பயன்படுத்தி தற்காலிகத் தொழிலாளர்களுக்கு வேலை வழங்க வேண்டும். அனைத்துத் தொழிலாளர்களுக்கும் வழங்கவேண்டிய விடுப்பு ஊதியம், பணக்கொடை, குறைந்தபட்ச ஊதிய நிலுவைத் தொகை போன்றவற்றை உடனடியாக வழங்க வேண்டும். 
இந்நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை தகுதியான தொழிலாளர்களின் வாரிசுகளுக்கு வழங்க வேண்டும். டான் டீ நிர்வாகம் தற்போது தேயிலை பயிரிட்டுள்ள நிலங்களின் சில பகுதிகளை வனத் துறைக்கு ஒப்படைக்கும் முடிவை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மாவட்டத் தலைவர் டி.பாலகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் நிர்வாகிகள், தொழிலாளர்கள் கலந்துகொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.