கோத்தகிரி அருகே உள்ள உயிலட்டி அருவியை சுற்றுலா தலமாக அறிவிக்க வேண்டும் என்று கோரிக்கை வலுத்துள்ளது.
கோத்தகிரி அருகே உயிலட்டி பகுதியில் உள்ள அருவியைக் காண ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகை தருகின்றனர்.
சுற்றுலாப் பயணிகளின் வசதியை முன்னிட்டு இப்பகுதியில் தடுப்புக் கம்பிகள் அமைத்தால் பாதுகாப்பாக இருக்கும். அருவில் இருந்து வெளியேறும் தண்ணீர் மாயாற்றில் கலக்கிறது.
உயிலட்டி பகுதியில் தடுப்பணை அமைத்தால் கூக்கல்துறை, மசகல், அண்ணா நகர் பகுதி விளைநிலங்கள் பயனடையும்.
தடுப்பணை அமைக்கக் கோரி நீண்டகாலமாக வலியுறுத்தியும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என இப்பகுதி விவசாயிகள் தெரிவிக்கின்றனர். ஏரளமான சுற்றுலாப் பயணிகள் இந்த அருவிக்கு வருவதால் இப்பகுதியை சுற்றுலா தலமாக மாற்ற வேண்டும் என்று இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








