உதகை நகராட்சிக்குச் சொந்தமான சேரிங்கிராஸ் பகுதி வணிக வளாகத்தில் உள்ள துரித உணவகக் கடையின் கீழ் தளத்தில் சுரங்கம் தோண்டி அகலப்படுத்தி ரகசியமாக உருவாக்கப்பட்ட சொகுசு அறைகளுக்கு நகராட்சி அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை சீல் வைத்தனர்.
நீலகிரி மாவட்டம், உதகை நகராட்சிக்குச் சொந்தமான சேரிங்கிராஸ் பகுதியில் வணிக வளாகத்தில் உள்ள துரித உணவகக் கடையின் கீழ் தளத்தில் சுரங்கம் தோண்டி அகலப்படுத்தி சொகுசு அறைகள் உருவாக்கப்பட்டுள்ளதாக நகராட்சி அதிகாரிகளுக்கு புகார் வந்தது. இதையடுத்து அந்த கடையில் நகராட்சி ஆணையர் ரவி உள்ளிட்ட அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
அப்போது கடையின் கீழ் தளத்தில் சுரங்கம் தோண்டி சொகுசு அறைகள் உருவாக்கப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டது.
பொது ஏலத்தின் மூலம் எடுக்கப்பட்ட இந்தக் கடைகளுக்கு தின வாடகை வசூலிக்கப்பட்டு வருகிறது. வெளி மாநிலத்தைச் சேர்ந்த சிலர் இரண்டு கடைகளை வாடகைக்கு எடுத்து நடத்தி வந்தனர். இவர்கள் தங்குவதற்காகவும், இவர்களோடு உதகையில் மற்ற கடைகளில் வேலை செய்யும் உறவினர்கள் தங்குவதற்காகவும் கடையின் கீழ் தளத்தில் சுரங்கம் தோண்டி அகலப்படுத்தி சொகுசு அறைகள் உருவாக்கியுள்ளது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து நகராட்சி ஆணையர் ரவி உத்தரவின் பேரில் மூன்று துரித உணவு கடைகளுக்கும் சீல் வைக்கப்பட்டது.
நகராட்சிக்குச் சொந்தமான கடைகளை மாற்றி அமைக்க சம்பந்தபட்ட அதிகாரிகளிடம் அனுமதி பெறாமல் இருந்தால் அவை மூடி சீல் வைக்கப்படும் என்று ஆணையர் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பள்ளி மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகை

காங்கிரஸ் கட்சியினா் அமைதிப் பேரணி

முல்லைப் பெரியாறு ஒப்பந்த நகல் எரிப்பு: தமிழக விவசாயிகள் எதிா்ப்பு

ஆடி கடைசி வெள்ளி: அம்மன் கோயில்களில் சிறப்பு வழிபாடு
விடியோக்கள்

Vishwanath And Sons Review | காதலில் வயது வித்தியாசம் ஒரு பிரச்னையா? | Suriya | Mamitha Baiju


