‘வந்தே மாதரம் முழுமையாகப் பாடப்போவதில்லை’ - கர்நாடக முதல்வர் டி.கே. சிவகுமார் உறுதிமேட்டூர் அணையை ஆக. 28-ல் திறந்து வைக்கிறார் முதல்வர் விஜய்! ஏற்பாடுகள் தீவிரம்!தமிழ்நாட்டில் வேகமெடுக்கும் பன்றிக் காய்ச்சல் பரவல்! சுகாதாரத்துறை எச்சரிக்கை!தமிழ் வழியில் படித்தவர்களுக்கு அரசுப் பணியில் முன்னுரிமை! மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல்!பாகிஸ்தானின் மிகப்பெரிய மருத்துவமனையில் தீ! 15 பச்சிளம் குழந்தைகள் பலி! மோகன் பாகவத்தின் நியூயார்க் நிகழ்வுக்கு மேயர் மம்தானி எதிர்ப்பு!மலையாளச் சொந்தங்களுக்கு இதயங்கனிந்த ஓணம் வாழ்த்துகள்! முதல்வர் விஜய்‘மகாபலியின் மண்ணில் சமத்துவம் மலரட்டும்: மனமார்ந்த ஓணம் வாழ்த்துக்கள்!’ - மு.க.ஸ்டாலின்குழந்தைகள், முதியவா்களுக்கு எச்1என்1 வைரஸ் பரவும் அபாயம் அதிகம்: மருத்துவா்கள் எச்சரிக்கைமேற்குத் தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்றும், நாளையும் மிதமான மழைக்கு வாய்ப்புபி.எட். சோ்க்கை: செப். 4 இறுதிநாளை சாா்-பதிவாளா் அலுவலகங்களில் கூடுதல் முன்பதிவு டோக்கன்: பதிவுத் துறை

உதகையில் நகராட்சி கடை கீழ் தளத்தில் சுரங்கம் தோண்டி சொகுசு அறை அமைப்பு: ஆய்வுக்குப் பின் சீல் வைப்பு

உதகை  நகராட்சிக்குச் சொந்தமான சேரிங்கிராஸ்  பகுதி வணிக வளாகத்தில் உள்ள துரித உணவகக் கடையின் கீழ் தளத்தில் சுரங்கம் தோண்டி

Published On :30 ஜனவரி 2024, 10:07 pm IST

உதகை  நகராட்சிக்குச் சொந்தமான சேரிங்கிராஸ்  பகுதி வணிக வளாகத்தில் உள்ள துரித உணவகக் கடையின் கீழ் தளத்தில் சுரங்கம் தோண்டி அகலப்படுத்தி ரகசியமாக உருவாக்கப்பட்ட சொகுசு அறைகளுக்கு நகராட்சி  அதிகாரிகள்  செவ்வாய்க்கிழமை சீல் வைத்தனர்.  
நீலகிரி மாவட்டம், உதகை நகராட்சிக்குச் சொந்தமான சேரிங்கிராஸ் பகுதியில் வணிக வளாகத்தில் உள்ள துரித உணவகக் கடையின் கீழ் தளத்தில் சுரங்கம் தோண்டி  அகலப்படுத்தி சொகுசு அறைகள் உருவாக்கப்பட்டுள்ளதாக  நகராட்சி அதிகாரிகளுக்கு  புகார் வந்தது.  இதையடுத்து அந்த கடையில் நகராட்சி  ஆணையர்  ரவி உள்ளிட்ட அதிகாரிகள் ஆய்வு செய்தனர். 
அப்போது கடையின் கீழ் தளத்தில் சுரங்கம் தோண்டி  சொகுசு அறைகள் உருவாக்கப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டது.
பொது ஏலத்தின் மூலம்  எடுக்கப்பட்ட இந்தக் கடைகளுக்கு  தின வாடகை வசூலிக்கப்பட்டு வருகிறது. வெளி மாநிலத்தைச் சேர்ந்த சிலர் இரண்டு கடைகளை வாடகைக்கு எடுத்து  நடத்தி வந்தனர். இவர்கள் தங்குவதற்காகவும், இவர்களோடு  உதகையில் மற்ற கடைகளில் வேலை செய்யும் உறவினர்கள்  தங்குவதற்காகவும் கடையின் கீழ் தளத்தில் சுரங்கம் தோண்டி அகலப்படுத்தி சொகுசு அறைகள் உருவாக்கியுள்ளது விசாரணையில் தெரியவந்தது.  இதையடுத்து நகராட்சி ஆணையர் ரவி  உத்தரவின்  பேரில்  மூன்று துரித உணவு கடைகளுக்கும் சீல் வைக்கப்பட்டது.   
நகராட்சிக்குச் சொந்தமான கடைகளை மாற்றி அமைக்க சம்பந்தபட்ட அதிகாரிகளிடம் அனுமதி பெறாமல் இருந்தால் அவை மூடி சீல் வைக்கப்படும் என்று  ஆணையர் தெரிவித்துள்ளார்.   

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.