பரந்தூர் திட்டத்தைக் கைவிடுவது அரசுக்கு பெரும் நிதி இழப்பை ஏற்படுத்தும்! உதயநிதிபள்ளிகளுக்கு 3 வகையான ஸ்டிக்கர் ஒட்டப்படும்: ஆதவ் அர்ஜுனா பேச்சுகொளத்தூர் தொகுதியில் வி.எஸ். பாபு வெற்றியை எதிர்த்து மு.க. ஸ்டாலின் வழக்கு! பால் கொள்முதல் விலையை மேலும் உயர்த்தி வழங்க வேண்டும்: இபிஎஸ் பரந்தூர் விமான நிலைய அறிவிப்பு! திமுக உறுப்பினர்கள் வெளிநடப்புமத்திய பாதுகாப்பு அமைச்சக பெண் அதிகாரி கருவுற்றிருந்த நிலையில் மரணம்! அதிர்ச்சி காரணம்ஓணம் பண்டிகை: சபரிமலை கோயிலில் இன்று நடை திறப்பு கட்டணமில்லா மகளிர் பேருந்து திட்டம் எப்போது? பேரவையில் அறிவித்தார் முதல்வர் விஜய்!பரந்தூர் விமான நிலையம் கைவிடப்படும்! அறிவித்தார் முதல்வர் விஜய்!! ஆண்டுக்கு 3 சிலிண்டர் இலவசம்: அன்னபூரணி சூப்பர் 6 திட்டம் தொடங்குவது எப்போது? முதல்வர் விஜய் அறிவிப்பு

குன்னூர் அருகே தேயிலைத் தோட்டங்களில் யானைகள் நடமாட்டம்: தொழிலாளர்கள் பீதி

குன்னூர் அருகே உள்ள டெரேமியா, தூதூர்மட்டம், அனிமேன், நாக்குநேரி ஆகிய பகுதிகளில் உள்ள தேயிலைத்

Published On :30 ஜனவரி 2024, 11:25 pm IST

குன்னூர் அருகே உள்ள டெரேமியா, தூதூர்மட்டம், அனிமேன், நாக்குநேரி ஆகிய பகுதிகளில் உள்ள தேயிலைத் தோட்டங்களில் யானைகள் நடமாட்டத்தால் தொழிலாளர்கள் பீதி அடைந்துள்ளனர்.
நீலகிரி மாவட்டத்தில் 65 சதவீத வனப் பகுதி உள்ளது. இந்த வனப் பகுதியில் யானை, காட்டெருமை, மான், சிறுத்தை, கரடி உள்ளிட்ட வனவிலங்குகள் உள்ளன. இவை உணவு தேடி அவ்வப்போது குடியிருப்புப் பகுதிகளுக்குள் நுழைவது வழக்கம். இதனால் விவசாயிகள் அதிக அளவில் பாதிக்கப்படுகின்றனர். சில நேரங்களில் மனித-வனவிலங்கு மோதல் ஏற்பட்டு உயிரிழப்பும் நிகழ்கின்றன. 
இதனைத் தடுக்க வனத் துறையினர் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இருப்பினும் வன விலங்குகள் ஊருக்குள் புகுவது தொடர்கிறது.
இந்த நிலையில்,  கடந்த சில நாள்களாக குன்னூர் அருகே உள்ள டெரேமியா, தூதூர்மட்டம், அனிமேன்,  நாக்குநேரி ஆகிய பகுதிகளில் குட்டியுடன் 5 யானைகள் முகாமிட்டன. 
அங்கு மேராக்காய், பீன்ஸ் உள்ளிட்ட விவசாயப் பயிர்களை தின்று அட்டகாசம் செய்தன. இந்த யானைகளை அடர்ந்த வனப் பகுதிக்குள் விரட்டும் பணியில் குந்தா வனத் துறையினர் ஈடுபட்டனர். 
ஆனால், அவை வனப் பகுதிக்குள் செல்லாமல் கிரேக்மோர், கிளன்கர்னி, குறியமலை ஆகிய பகுதிகளுக்குள் புகுந்தன. இங்குள்ள தேயிலைத் தோட்டங்களில் நடமாடும் யானைகளால் தொழிலாளர்கள் பீதி அடைந்து உள்ளனர். 
இதனால் பச்சை தேயிலைப் பறிக்கும் பணி பாதிக்கப்பட்டு உள்ளது. தொடர்ந்து, யானைகளின் நடமாட்டத்தை கண்காணித்து, அடர்ந்த வனப் பகுதிக்குள் விரட்டும் பணியில் வனத் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.