தமிழக முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் நினைவு தினத்தையொட்டி கோத்தகிரியில் உள்ள அவரது உருவச் சிலைக்கு அதிமுகவினர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.
நீலகிரி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் எம்.ஜி.ஆர். நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. கோத்தகிரியில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட அதிமுக செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான கே.ஆர். அர்ஜுனன் தலைமைத் தாங்கினார். அவைத் தலைவரும், மக்களவை உறுப்பினருமான சி . கோபாலகிருஷ்ணன், குன்னூர் சட்டப் பேரவை உறுப்பினரும், அம்மா பேரவை மாவட்டச் செயலாளருமான சாந்தி ராமு ஆகியோர் முன்னிலை வகித்தனர். கோத்தகிரி டானிங்டன் பகுதியில் உள்ள எம்ஜிஆர் சிலைக்கு அதிமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
உதகை காபி ஹவுஸ் பகுதியில் எம்ஜிஆர் திருவுருவப் படத்துக்கு அதிமுக நகரச் செயலாளர் சண்முகம் தலைமையில் அதிமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
குன்னூர் அண்ணா சிலை அருகில் வைக்கப்பட்டிருந்த எம்ஜிஆர் உருவப்படத்துக்கு அதிமுக நகரச் செயலாளர் டி.சரவணகுமார் உள்பட கட்சி நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

திருமணத்துக்கு முன் குஷ்பு மகள் அவந்திகா பகிர்ந்த படங்கள்!
கணக்கில் வராத ரூ.40 லட்சம் பறிமுதல்! எ.வ. வேலுக்கு தொடர்புடைய 20 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

தலைவர்களை இழிவுபடுத்தும் இடமல்ல சட்டமன்றம்! கனிமொழி எம்.பி | DMK | TVK

வெனிசுவேலா நிலநடுக்கம்! மீட்புப் படைகளை அனுப்பும் அமெரிக்கா!
விடியோக்கள்

மெஸ்ஸியைத் துரத்தும் எம்பாபே! | FIFA | FIFA World Cup | Messi |

பார்வையாளர்களைப் பரிசோதிக்கும் அனந்தன் காடு: திரைவிமர்சனம்

மின் கட்டணம் உயர்வா? வெள்ளை அறிக்கை வெளியிட்டு பேசிய அமைச்சர் நிர்மல் குமார் | Dinamani


