கோத்தகிரி ஊராட்சிகளில் நேரடியாக குப்பைகள் சேகரிக்கும் திட்டம்

நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா உத்தரவின்பேரில் உன்னத உதகை திட்டத்தின்கீழ், கோத்தகிரி ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட 11 கிராம
Updated on
1 min read

நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா உத்தரவின்பேரில் உன்னத உதகை திட்டத்தின்கீழ், கோத்தகிரி ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட 11 கிராம ஊராட்சிகளில் நேரடியாகச் சென்று குப்பை சேகரிக்கும் திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளதாக வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெயபிரகாஷ் தெரிவித்துள்ளார்.  
இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது: 
உன்னத உதகை திட்டத்தின்கீழ் ஒவ்வொரு மாதத்தின் 2-ஆவது, நான்காவது வெள்ளிக்கிழமைகளில் குஞ்சப்பனை, ஜக்கனாரை, கொணவக்கரை ஊராட்சிகளிலும், அனைத்து திங்கள், புதன், வியாழக்கிழமைகளில் நெடுகுளா ஊராட்சியிலும், செவ்வாய், சனிக்கிழமைகளில் நடுஹட்டி ஊராட்சியிலும், மாதத்தின் கடைசி வெள்ளிக்கிழமைகளில் அரக்கோடி, கடினாமாலா ஊராட்சிகளிலும், தேனாடு ஊராட்சியில் வெள்ளி, ஞாயிற்றுக்கிழமைகளிலும், முதல் மூன்று வெள்ளிக்கிழமைகளில் கோடநாடு ஊராட்சியிலும், மாதத்தின் அனைத்து நாள்களிலும் கெங்கரை ஊராட்சியிலும் தூய்மைக் காவலர்கள் மட்கும், மட்காத  குப்பைகளைச் சேகரிக்க வருவார்கள்.
இதன் மூலம் உன்னத உதகைத் திட்டத்தை  நூறு சதவீதம் வெற்றி பெற அனைத்து ஊராட்சி பொதுமக்களும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com