தேர்தலுக்கிடையே, அசாமில் காங்கிரஸ் எம்.பி. ராஜிநாமா! பாஜகவில் இணைந்தார்!தமிழகத்தில் கோடை வெப்பம் குறைய வாய்ப்பு.. அடுத்த ஒரு வாரத்திற்கு மழை!தில்லி குடியிருப்புக் கட்டடத்தில் தீ: 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பலிதுரந்தர் - 2 சிறப்பு திரையிடல்: ஹிந்தி தவிர பிறமொழிக் காட்சிகள் ரத்து!பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!
/

தனியார் வாகனங்களை வாடகைக்கு ஓட்டுவதை தடுக்க வலியுறுத்தி ஆட்சியருக்கு மனு

கூடலூர் பகுதியில் தனியார் வாகனங்களை முறைகேடாக வாடகைக்கு இயக்கப்படுவதைத் தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று

News image
Updated On :1 மார்ச் 2018, 1:41 am

DIN

கூடலூர் பகுதியில் தனியார் வாகனங்களை முறைகேடாக வாடகைக்கு இயக்கப்படுவதைத் தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சுற்றுலா வாகன ஓட்டுநர்கள் மாவட்ட ஆட்சியருக்கு மனு அனுப்பியுள்ளனர்.
இதுகுறித்து, அவர்கள் மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பிய மனு விவரம்:
கூடலூர் பகுதியில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுற்றுலா வாகனங்கள் பல ஆண்டுகளாக இயக்கப்பட்டு வருகின்றன. சுற்றுலா வாகன ஓட்டுநர்களின் வாழ்வாதாரம் பாதிக்கும் வகையில் குறைந்த வாடகைக்கும், தின வாடகைக்கும் இயக்கி வருகின்றனர். இப்பணியில் 400-க்கும் மேற்பட்ட தனியார் வாகன ஓட்டுநர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
இதுகுறித்து பல முறை புகார் அளித்தும் இதுவரை பலனில்லை. உறுதியான நடவடிக்கை இதுவரை எடுக்கப்படவில்லை. இதைத் தடுக்க தனியாகப் பறக்கும் படை அமைத்து கண்காணிக்க வேண்டும். இல்லையெனில் சுற்றுலா வாகன ஓட்டுநர்கள் தங்களது உரிமத்தை மாவட்ட ஆட்சியரிடம் ஒப்படைத்து தனியார் வாகனங்களாக மாற்ற முடிவெடுத்துள்ளோம் எனத் தெரிவித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.