கூட்டுறவுத் தேயிலைத் தொழிற்சாலைகள் தங்களுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகையினை உடனடியாக வழங்க வேண்டும் என்று நெலிகோலு குறு, சிறு தேயிலை விவசாயிகள் சங்கம் வலியுறுத்தி உள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள 16 கூட்டுறவுத் தேயிலைத் தொழிற்சாலைகளில் 30 ஆயிரம் சிறு, குறு தேயிலை விவசாயிகள் உறுப்பினர்களாக உள்ளனர். இந்த விவசாயிகள் பசுந்தேயிலையை கூட்டுறவுத் தேயிலைத் தொழிற்சாலைகளுக்கு வழங்கி வருகின்றனர். கடந்த பல ஆண்டுகளாகத் தேயிலைக்குப் போதிய விலை கிடைக்காத போதிலும் விவசாயிகள் தேயிலைத்
தொழிலையே நம்பி வாழ்ந்து வருகின்றனர். கூட்டுறவுத் தேயிலைத் தொழிற்சாலையை மேம்படுத்த அரசு மானிய உதவியுடன் பல கோடி ரூபாய் நிதியும் அளித்து புனரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால், பசுந்தேயிலைக்கான விலை ஏற்றத்தில் எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை. தேயிலை வாரியம் அறிவித்த குறைந்தபட்ச விலையான, கிலோ ரூ.14.50ஐ கூட உறுப்பினர்களுக்கு முறையாக வழங்காததால் சுமார் ரூ. 37 கோடி கடந்த ஓராண்டாக தேயிலை விவசாயிகளுக்கு வழங்கப்படாமல் நிலுவையாக உள்ளது.
மகாலிங்கா, மேற்குநாடு, இத்தலார் உள்ளிட்ட கூட்டுறவு தொழிற்சாலைகளில் 5,000 பேர் உறுப்பினர்களாக உள்ளனர். இவர்களுக்கு, ஜூன் மாதத்திலிருந்து செப்டம்பர் மாதம் வரை வழங்கப்பட்ட பசுந்தேயிலைக்கு குறைந்த அளவிலான முன்பணத் தொகை மட்டும் வழங்கப்பட்டுள்ளது. நான்கு மாதங்களாக விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய தொகை ரூ.1.50 கோடி நிலுவையில் உள்ளது.
தற்போது, தீபாவளிப் பண்டிகை நெருங்கி வரும் வேளையில் நிலுவைத் தொகை கிடைப்பதில் ஏற்படும் தாமதத்தால் சிறு, குறு தேயிலை விவசாயிகள் அவதிக்கு ஆளாகி உள்ளனர். இதன் காரணமாக பெரும்பாலான உறுப்பினர்கள் பசுந்தேயிலையை தனியார் தொழிற்சாலைக்கு விநியோகிப்பதால் கூட்டுறவு தொழிற்சாலைக்கு தேயிலை வரத்து குறைந்துள்ளது.
இது குறித்து நெலிகோலு குறு, சிறு தேயிலை விவசாயிகள் சங்கத் தலைவர் ராமன் கூறுகையில், கூட்டுறவு தொழிற்சாலைகளில் விவசாயிகளுக்கான நிலுவைத் தொகையை வழங்காமல் காலதாமதம் செய்வதால் பொருளாதார நெருக்கடியில் விவசாயிகள் சிக்கியுள்ளனர். எனவே, இன்கோ சர்வ் நிர்வாகம் உடனடியாகத் தலையிட்டு இப்பிரச்னைக்குத் தீர்வு காண வேண்டும் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மசோதாவில் நிறைய குழப்பங்கள் உள்ளன; வாய்மொழி உத்தரவாதம் போதாது! கனிமொழி

காளியும் கருப்புதான்!! கருப்பு உடையை விமர்சித்த மோடிக்கு கனிமொழி பதில்!

156 நாள்களின் கடின உழைப்பு..! ரிலீஸ் அப்டேட்டையும் வெளியிட்ட துல்கர் சல்மான்!

சென்னையிலிருந்து சொந்த ஊர்களுக்குப் படையெடுக்கும் புலம்பெயர் தொழிலாளர்கள்! காரணம்?
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறை ஏன்? எதற்கு?எப்படி?| UN Kannan Interview | Delimitation | Women's reservation bill
தினமணி செய்திச் சேவை

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

