கேரளத்தின் வயநாடு மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தோட்டத் தொழிலாளர்களுக்கு நிவாரணப் பொருள்கள் ரெப்கோ வங்கி சார்பில் திங்கள்கிழமை வழங்கப்பட்டன.
கடந்த மாதம் கேரள மாநிலத்தில் பெய்த கடும் மழையால் பல இடங்கள் பாதிக்கப்பட்டன. இதில் வயநாடு மாவட்டத்தின் மானந்தவாடி பகுதியில் கம்பமலை மறுவாழ்வுத் திட்டத்தின் கீழ் செயல்படும் கேரள அரசுக்குச் சொந்தமான எஸ்டேட் சாலையும் பாலங்களும் அடித்துச் செல்லப்பட்டதால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.
இதனால் அப்பகுதிக்கு உணவு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்கள் கிடைக்காத நிலை ஏற்பட்டது.
ரெப்கோ வங்கியின் இயக்குநர்கள் மகாலிங்கம், முனீஸ்வர் கணேசன் ஆகியோரின் பரிந்துரைப்படி, வங்கின் நிர்வாக இயக்குநர் இசபெல்லா, கம்பமலை எஸ்டேட்டில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு நிவாரணப் பொருள்களை வழங்க உத்தரவிட்டார்.
அதன்படி, பந்தலூர் ரெப்கோ வங்கி மேலாளர் பாலாஜி, கூடலூர் ரெப்கோ வங்கியின் உதவி மேலாளர் ஸ்வஸ்திக், பணியாளர்கள் சந்திரசேகர், பாலமுருகன் ஆகியோருடன் ரெப்கோ வங்கி டெலிகேட்ஸ் யூனியனின் தென்னிந்திய தலைவர் சு.ஆனந்தராஜ், துணைத் தலைவர் கு.கிருஷ்ணபாரதியார் ஆகியோர் சம்பந்தப்பட்ட எஸ்டேட்டுக்குச் சென்று தொழிலாளர்களைச் சந்தித்து, 120 குடும்பங்களுக்கு நிவாரணப் பொருள்களை வழங்கினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
சென்னையில் ஐபிஎல்: மெட்ரோ ரயிலில் நாளை இலவசமாக பயணிக்கலாம்!
மகளிர் உரிமைத் தொகையைப் பெற்றுத்தந்தது அதிமுகதான்! - எடப்பாடி பழனிசாமி

ரூபாய் மதிப்பு சரிவு: 1 டாலர் - ரூ. 92.68! 17 காசுகள் சரிவு!
வீடியோக்கள்

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை

Podcast | மனம் மாறுவாரா ராகுல் காந்தி? | News & Views | E-25 |
தினமணி செய்திச் சேவை

நான் எந்த ஆயுதத்தை எடுக்க வேண்டும் என்பதை முடிவு செய்வது எதிரிகள்தான்!
இணையதளச் செய்திப் பிரிவு

