கோத்தகிரி பேரூராட்சிக்கு உள்பட்ட பாறைமேடு, கே.கே.நகர் பகுதிகளில் தெரு விளக்குகள் இல்லாததால் மக்கள் மிகவும் அவதியுற்று வருகின்றனர்.
கோத்தகிரி பேரூராட்சிக்கு உள்பட்ட பாறைமேடு, கே.கே.நகர் பகுதிகளில் சுமார் 200 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதிக்கு சரியான போக்குவரத்து வசதியில்லாததால், தோட்டத் தொழிலாளர்கள், முதியவர்கள், மாணவ மாணவிகள் டானிங்டன் வரை சுமார் 3 கி.மீ. தொலைவுக்கு நடந்தே வர வேண்டியுள்ளது.
இந்தச் சாலை அடர்ந்த வனப்பகுதிக்கு அருகில் இருப்பதால் இப்பகுதிகளில் காட்டெருமை, கரடி, சிறுத்தை போன்ற வனவிலங்குகளின் நடமாட்டம் அதிக அளவில் உள்ளது.
இச்சாலையின் நடுவிலுள்ள தனியார் தேயிலைத் தொழிற்சாலை அருகில் மட்டும் தெருவிளக்குகள் எரிகின்றன. மற்ற இடங்களில் தெரு விளக்குகள் எரியாததால், இப்பகுதி மக்கள் இச்சாலை வழியாக அச்சத்துடன் செல்ல வேண்டியுள்ளது. எனவே பெரும்பாலானவர்கள் மாலை 6 மணிக்கு முன்ணதாகவே தங்கள் வீடுகளுக்குத் திரும்புகின்றனர்.
இப்பகுதி முன்னாள் கவுன்சிலர் கனகராஜ் கூறுகையில், "கே.கே. நகர், பாறைமேடு பகுதிகளில் ஏராளமான விலங்குகள் நடமாடி வருகின்றன. எனவே இச்சாலை வழியாக வரும் மக்கள் உயிருக்கு அஞ்சியபடி தினமும் வந்து செல்கின்றனர். பேரூராட்சி நிர்வாகத்திடம் இப்பகுதியில் உடனடியாக தெரு விளக்குகளை அமைக்குமாறு கோரி பல முறை புகார் மனு கொடுத்துள்ளோம். மக்கள் நலன் கருதி அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இலங்கை- செம்மணி மனிதப் புதைகுழி அகழாய்வு: நீதிமன்ற உத்தரவில் மீண்டும் தொடக்கம்

மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை

தமிழகத்தில் திமுக ஆட்சி தொடரும்- மேற்கு வங்கம், அஸ்ஸாமில் பாஜக; கேரளத்தில் காங்கிரஸ் கூட்டணிக்கு வாய்ப்பு - வாக்குக் கணிப்பில் தகவல்

தேவகோட்டை நகர சிவன் கோயிலில் இரட்டைத் தேரோட்டம்
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

