சோழவரம் அருகே ஆளில்லா விமானத்தை இயக்குவதற்கான மையம் அமைக்கப்படும்: சட்டப்பேரவையில் அமைச்சர் கீர்த்தனாஉளுந்தூர்பேட்டையில் பயன்பாட்டில் இல்லாத விமான ஓடுதளத்தை மீண்டும் செயல்படுத்த நடவடிக்கை: அமைச்சர் கீர்த்தனாவீட்டில் இருந்து பணிபுரிவதை ஊக்குவிப்பதற்காக மைக்ரோ டெக் பார்க்: தொழில் துறை அறிவிப்புராமேஸ்வரத்தில் புதிய விமான நிலையம் அமைக்கத் திட்டம்! ஓசூரில் நிச்சயம் வரும் - அமைச்சர் கீர்த்தனா உறுதிடாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 24 காசுகள் உயர்ந்து ரூ. 95.46 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: சென்செக்ஸ், நிஃப்டி உயர்வு!

இந்து இயக்கப் பிரமுகர்களைக் கொல்ல சதி: நீலகிரியில் சிறப்பு பிரிவு போலீஸார் விசாரணை

கோவையில் இந்து இயக்கப் பிரமுகர்களைக் கொலை செய்ய சதித் திட்டம் தீட்டியதாக கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் குன்னூரில்

Published On :30 ஜனவரி 2024, 10:12 pm IST

கோவையில் இந்து இயக்கப் பிரமுகர்களைக் கொலை செய்ய சதித் திட்டம் தீட்டியதாக கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் குன்னூரில் படித்தவர் என்பதால் நீலகிரி மாவட்டத்தில் அவருக்குள்ள தொடர்பு குறித்து சிறப்பு பிரிவு  போலீஸார் ரகசிய விசாரணை நடத்தி வருகின்றனர்.
   இந்து இயக்கங்களைச் சேர்ந்த முக்கியப் பிரமுகர்களைக் கொலை செய்ய சதித் திட்டம் தீட்டியதாக மத்திய புலனாய்வுப் பிரிவு  அதிகாரிகள் கொடுத்த தகவலின்படி 5 இளைஞர்களை வெரைட்டிஹால் ரோடு போலீஸார் கடந்த ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர். 
இதில், கோவை, என்.எச்.சாலையைச் சேர்ந்த ஆர்.ஆஷிக் (25),   திண்டிவனத்தைச் சேர்ந்த எஸ்.இஸ்மாயில் (25), சென்னை  வியாசர்பாடியைச் சேர்ந்த இ.ஜாபர் சாதிக் அலி (29), பல்லாவரத்தைச் சேர்ந்த எஸ்.சம்சுதீன் (20), ஓட்டேரியைச் சேர்ந்த எஸ். சலாவுதீன் (25) ஆகியோர் கோவையில் உள்ள இந்து இயக்கங்களின் பிரமுகர்களைக் கொலை செய்யத் சதித் திட்டம் தீட்டியது விசாரணையில் தெரியவந்தது.
 இதையடுத்து  5 பேர் மீதும் சட்ட விரோத நடவடிக்கை தடுப்புச் சட்டம்  உள்ளிட்ட 7 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்தனர். இதைத் தொடர்ந்து உக்கடம் ஜி.எம். நகரைச் சேர்ந்த ஆட்டோ பைசல் (28) என்பவரையும் புதன்கிழமை கைது செய்தனர். 
இந்நிலையில் கைது செய்யப்பட்ட 5 பேரில் கோவையைச் சேர்ந்த ஆர்.ஆஷிக் தனது  பள்ளிப் படிப்பை நீலகிரி மாவட்டத்தில் குன்னூரில் முடித்ததாகவும்,  அதன் பின்னரே குடும்பத்தினருடன் கோவைக்கு சென்று கரும்புக்கடை பகுதியில் குடியேறியதாகவும் அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையின்போது  தெரிவித்துள்ளார்.
 இதையடுத்து சிறப்பு பிரிவு அதிகாரிகள் குழுவினர் ஆஷிக்கிற்கு குன்னூர் மற்றும்  நீலகிரி மாவட்டத்தின் பிற பகுதிகளில் அவருக்குள்ள தொடர்புகள் குறித்தும் விசாரணை நடத்தியுள்ளனர். 
இதில் சந்தேகத்துக்குரிய சில அழைப்புகள் மற்றும் முகவரிகள் தொடர்பாக நேரிலும் ஆய்வு நடத்தியுள்ளனர். நீலகிரிக்கு புதன்கிழமை வந்த இந்த சிறப்பு பிரிவு  அதிகாரிகள் குழுவினர் உதகை, குன்னூர்,  கூடலூர் மற்றும் பந்தலூர் பகுதிகளிலும் ஆய்வு நடத்தியுள்ளனர்.
 இதுதொடர்பாக உதகையில் காவல் துறை அதிகாரிகளிடம் கேட்டபோது,  நீலகிரி மாவட்டத்தில் இந்து இயக்கத் தலைவர்கள் எவருக்கும்  இதுவரையிலும் எத்தகைய மிரட்டலும் விடுக்கப்படவில்லை. இதுதொடர்பாக ஏற்கெனவே கைது செய்யப்பட்டுள்ள 6 பேரில் ஆஷிக்கை தவிர நீலகிரி மாவட்டத்தோடு தொடர்புள்ளவர்  எவருமில்லை எனத் தெரிவித்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.