ஆசிய விளையாட்டு: 10 மீ. ஏர் ரைபிள் பிரிவில் வெள்ளி வென்ற ஆடவர் அணி!கேரளத்தில் கனமழை! - 6 பேர் பலி; இன்று மஞ்சள் எச்சரிக்கை!மம்தா முடிவால் எதிர்க்கட்சிகள் ஓரணியில் மீண்டும் திரள வாய்ப்புபாஜக வாக்குகளைக் குறைக்க சமாஜவாதி தீவிரம்: அகிலேஷ் யாதவ் புதிய முயற்சி!21 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புதில்லி எஸ்ஐஆா்: முரண்பாடுகள் கொண்ட வாக்காளா் பட்டியலில் அத்வானி, சிசோடியா பெயா்கள்!

நெடுகுளா ஊராட்சியில் மனுநீதி நாள்: 110 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி

கோத்தகிரி வட்டம், நெடுகுளா ஊராட்சி அம்மன் நகர் சமுதாய கூடத்தில் நடைபெற்ற மனுநீதி நாள்  முகாமில் 110 பயனாளிகளுக்கு

Published On :

கோத்தகிரி வட்டம், நெடுகுளா ஊராட்சி அம்மன் நகர் சமுதாய கூடத்தில் நடைபெற்ற மனுநீதி நாள்  முகாமில் 110 பயனாளிகளுக்கு மொத்தம் ரூ. 32 லட்சத்து 58 ஆயிரம் மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா புதன்கிழமை வழங்கினார்.
மனுநீதி நாள் முகாமுக்கு தலைமை வகித்து,  நலத்திட்ட உதவிகளை வழங்கி ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா பேசியதாவது: அரசின் பல்வேறு திட்டங்கள் பொதுமக்களை சென்றடையும் வகையில் மனுநீதி நாள் முகாம் நடத்தப்பட்டு வருகிறது. மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதித் திட்டத்தின் கீழ் பொதுமக்களே தங்கள் ஊருக்குத் தேவையான அடிப்படை வசதிகளை செய்துகொள்ளலாம். கோரிக்கை மனுக்களை 99431 26000 வாட்ஸ் அப் எண்ணுக்கு அனுப்பி வைத்தால் 48 மணி நேரத்திற்குள் உடனடியாகத் தீர்வு கிடைக்கும் என்றார்.
முகாமில் முதியோர், முதிர்கன்னி, விதவை, கணவனால் கைவிடப்பட்டோருக்கான உதவித் தொகை,  கல்வி உதவித் தொகை, ஈமச்சடங்கு உதவித் தொகை,  உழவர் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் திருமண உதவித் தொகை, விலையில்லா சலவைப் பெட்டி,  புதிய குடும்ப அட்டைகள், ஹெத்தையம்மன் கேர்கம்பை வங்கி மூலம்  12 பயனாளிகளுக்கு பயிர்க் கடனாக ரூ. 8 லட்சத்து 95 ஆயிரத்துக்கான  காசோலை,  இந்தியன் வங்கியின் கோத்தகிரி கிளையின் மூலம் தொழில் தொடங்க  சுய உதவிக் குழுவுக்கு 
ரூ. 5 லட்சத்துக்கான காசோலை, 2 பயனாளிகளுக்கு  கல்விக் கடனாக ரூ. 7 லட்சத்துக்கான காசோலை,  இயற்கை வேளாண் இடுபொருள்கள் ஆகியவற்றை ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா வழங்கினார். தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்ற கல்லூரி மாணவ, மாணவிகளுக்குப் பரிசுத் தொகை, பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டன. 
இதில், பொதுமக்களிடமிருந்து  140 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன. குன்னூர்  சட்டப் பேரவை உறுப்பினர் சாந்தி ராமு, கோட்டாட்சியர் பத்ரிநாத்,  வட்டாட்சியர்  ரவிக்குமார், அரசுத்துறை அலுவலர்கள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.