யூடியூபர் சவுக்கு சங்கர் மீதான குண்டர் சட்டம் ரத்து! - தமிழக அரசு தமிழ்நாட்டில் இன்றும், நாளையும் 5 மாவட்டங்களில் கனமழை!கண்ணீரில் மக்கள்! இத்தாலியில் மிட்டாய் கொடுப்பதில் பிரதமர் பிஸி! ராகுல் விமர்சனம்வெற்றியால் கூத்தாடுவதுமில்லை; தோல்வியால் துவண்டு விடுவதுமில்லை! மு.க. ஸ்டாலின் அதிமுகவுக்கு அமைச்சரவையில் இடமில்லை என தவெக உறுதி! திருமாவளவன் பிரான்ஸ் ஜி7 மாநாட்டில் டிரம்ப் பங்கேற்பு! மோடிக்கும் அழைப்பு!
/

நெலாக்கோட்டை ஊராட்சியில் 30 பெண்களுக்கு விலையில்லா ஆடுகள்

கூடலூரை அடுத்துள்ள நெலாக்கோட்டை ஊராட்சியில் 30 ஏழைப் பெண்களுக்கு தமிழக அரசின் விலையில்லா ஆடுகள் திங்கள்கிழமை வழங்கப்பட்டன.

Updated On :13 பிப்ரவரி 2019, 7:48 am IST

கூடலூரை அடுத்துள்ள நெலாக்கோட்டை ஊராட்சியில் 30 ஏழைப் பெண்களுக்கு தமிழக அரசின் விலையில்லா ஆடுகள் திங்கள்கிழமை வழங்கப்பட்டன.
கூடலூர் பகுதியிலுள்ள நெலாக்கோட்டை ஊராட்சியில் ஏழைப் பெண்களுக்கு தமிழக அரசின் விலையில்லா ஆடுகள் வழங்கும் திட்டத்தின் கீழ் இரண்டாம் கட்டமாக 30 பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டனர். இதில், பயனாளிக்கு மூன்று பெண் ஆடுகள், ஒரு  ஆண் ஆடு என தலா 4 ஆடுகள் வழங்கப்பட்டன. பயனாளிகளுக்கு கால்நடை பராமரிப்புத் துறை இணை இயக்குநர் டாக்டர் மனோகரன் ஆடுகளை வழங்கினார். 
உதவி இயக்குநர் டாக்டர் மெய்யநாதன் மேற்பார்வையில் ஓவேலி கால்நடை மருத்துவர் எஸ்.பாரத்ஜோதி, நெலாக்கோட்டை கால்நடை மருத்துவர் நந்தினி, சேரம்பாடி கால்நடை மருத்துவர் ஜீவா, அய்யன்கொல்லி கால்நடை மருத்துவர் ரேவதி, டாக்டர் டேவிட் மோகன், உதவியாளர்கள் கலந்துகொண்டனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.