பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட 9 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி உதகையில் ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
உதகையில், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு ஜாக்டோ அமைப்பின் சார்பில் அண்ணாதுரை, பிராங்ளின் ஆகியோரும், ஜியோ அமைப்பின் சார்பில் சுப்பிரமணி, குமாரராஜா ஆகியோரும் தலைமையேற்றனர். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் நூற்றுக்கணக்கானோர் பங்கேற்றனர்.
ஜாக்டோ- ஜியோ சார்பில் அமைப்பாளர் ஸாகிரா கூறியதாவது: ஜாக்டோ-ஜியோ அமைப்பின் சார்பில் நடைபெறும் தொடர் போராட்டம் காரணமாக செவ்வாய்க்கிழமை நீலகிரி மாவட்டத்தில் 60 சதவீத ஊழியர்கள் பணிக்குச் செல்லவில்லை. உதகையில் ஊரக வளர்ச்சித் துறையில் 95 %, வேலைவாய்ப்புத் துறையில் 100% ஊழியர்கள் பணிக்குச் செல்லவில்லை. செவ்வாய்க்கிழமை உதகை, குன்னூர், கோத்தகிரி, கூடலூர் ஆகிய 4 இடங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன. புதன்கிழமை உதகையில் ஏடிசி சுதந்திர சதுக்கப் பகுதியில் மறியல் போராட்டம் நடைபெறும். அதைத் தொடர்ந்து வியாழக்கிழமை உதகையில் மத்தியப் பேருந்து நிலையம் எதிரிலும், 25 ஆம் தேதி வெள்ளிக்கிழமை உதகையில் சேரிங்கிராஸ் பகுதியிலும் மறியல் போராட்டம் நடைபெறும் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தேர்தல் தோல்விக்குப் பின் அதிமுக அலுவலகத்தில் இபிஎஸ்! மாவட்டச் செயலர்களுடன் ஆலோசனை!

ஆதார் அட்டையை இலவசமாக புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு! புதிய செயலி அறிமுகம்!
மிக இளம் வயது மேயர்! பிரிட்டன் வரலாற்றில் இடம்பெற்ற இந்திய வம்சாவளி இளைஞர்!!

அடுத்த 2 மணி நேரத்துக்கு 10 மாவட்டங்களில் மழை!
விடியோக்கள்

வெளியானது பெத்தி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | திமுக - அதிமுக கூட்டணி: திருமாவளவனைச் சுற்றி அரசியல்! | News and Views | Epi - 36 |
தினமணி செய்திச் சேவை

எந்தெந்த அணிகளுக்கு பிளே ஆஃப் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது?
தினமணி செய்திச் சேவை

என்னை முதல்வராக்க திமுக, அதிமுக தரப்பில் அதிகாரப்பூர்வமாக யாரும் அணுகவில்லை - Thirumavalavan
இணையதளச் செய்திப் பிரிவு
