தில்லியில் மெட்ரோ நிலையம் அருகே அடுக்குக் கட்டடம் இடிந்து விபத்து: 12 பேர் மீட்புசென்னை: கோயம்பேட்டில் காரை ஏற்றி இளம்பெண் கொலை இரண்டாம் முறையாக பட்டம் வெல்வது யாா்? பெங்களூரு - குஜராத் இன்று மோதல்! ‘ஆபரேஷன் சிந்தூா் 2.0’-க்கு பாதுகாப்புப் படைகள் தயாா்: ராணுவ தலைமைத் தளபதி உபேந்திர துவிவேதி!மேற்கு வங்கத்தில் மம்தாவின் மருமகன் அபிஷேக் பானா்ஜி மீது தாக்குதல்: கற்கள், காலணிகள் வீசப்பட்டதால் பரபரப்பு!1,200 கோயில்களின் நகைகள், சொத்துகள் விரைவில் கணக்கெடுப்பு: திருவிதாங்கூா் தேவஸ்வம் திட்டம்கடற்கரை - செங்கல்பட்டு மின்சார ரயில்: உச்ச நேரங்களில் 6 - 10 நிமிஷங்களுக்கு ஒரு ரயில்! நாட்டில் ரூ. 48,000 கோடிக்கு வங்கி மோசடிகள்!நடிகர் அஜித் குமாரின் தாயார் உடலுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! திருவாரூர்: சேங்காலிபுரம் பகுதியில் வீடு புகுந்து மேஸ்திரி படுகொலை - 3 பேர் கைதுபெங்களூரில் ஐபிஎல் கொண்டாட்டங்களுக்கு தடைஆளுநர் மாளிகையில் காவி உடையில் திருவள்ளுவர் படம்: உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!ஆட்சி அமைக்க டி.கே. சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்
/

கூடலூரில் நிலப் பிரச்னையை திமுக கண்டுகொள்ளாதது ஏமாற்றம் அளிக்கிறது: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்

கூடலூரில் பிரிவு 16ஏ நிலப் பிரச்சனை தொடர்பாக திமுக தலைமைக் கண்டு கொள்ளாதது ஏமாற்றம் அளிப்பதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்துள்ளது.

Updated On :23 ஜனவரி 2019, 5:33 am IST

கூடலூரில் பிரிவு 16ஏ நிலப் பிரச்சனை தொடர்பாக திமுக தலைமைக் கண்டு கொள்ளாதது ஏமாற்றம் அளிப்பதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக உதகையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலர் பாஸ்கரன், முன்னாள் மாவட்டச் செயலர்கள் என்.வாசு, ஆர்.பத்ரி, தமிழ்நாடு விவசாய சங்க மாநில துணைத் தலைவர் ரவீந்திரன் ஆகியோர்  செவ்வாய்க்கிழமை செய்தியாளர்களிடம் கூறியதாவது:
கூடலூரில் உள்ள ஜென்மம் நிலங்களை வனத் துறைக்கு வகை மாற்றம் செய்யும் வகையிலான சட்ட திருத்தம் 16ஏ அண்மையில் சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்தப் பிரிவுக்குள் எந்த நிலம் வகைப்படுத்தப்படும் என்ற விவரம்கூட தெரிவிக்கப்படவில்லை. இதற்கு சட்டப் பேரவையில் திமுக பெரியளவில் எதிர்ப்புக்காட்டவில்லை. இது தொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து விளக்க வேண்டும் எனக் கருத்து தெரிவித்துள்ளது ஏமாற்றம் அளிப்பதாக உள்ளது.  இந்த சட்டத் திருத்தத்தை உடனடியாக கைவிட வேண்டும்.
நீலகிரி  உள்ளிட்ட மலைப் பகுதிகளில் பட்டா வழங்கத் தடையாகவுள்ள அரசாணையையும் ரத்து செய்ய வேண்டும்.  நீலகிரி மாவட்டத்தில் வன உரிமைச் சட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும். பழங்குடியின மக்களுக்கு நிலப் பட்டாவுடன், வீடுகள், தொகுப்பு வீடுகளையும் கட்டித்தர வேண்டும். 
இந்தியாவில் தமிழகம் உள்ளிட்ட 22 மாநிலங்களில் 100 சதவீத அளவுக்கு மின் இணைப்புகள் கொடுக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ள தகவல் தவறானதாகும். 
கூடலூர் பகுதியில் மட்டும் சுமார்  10,000 வீடுகளுக்கு மின் இணைப்பு வழங்கப்படாத நிலையில் தமிழகத்தில் 100 சதவீத மின் இணைப்புக் கொடுத்துள்ளதாக தமிழக மின் துறை அமைச்சர் தவறான தகவலை தில்லிக்கு தந்துள்ளார். எனவே, மின் இணைப்பு இல்லாத அனைவத்து வீடுகளுக்கும் உடனடியாக மின் இணைப்பு அளிக்கப்பட வேண்டும்.
நீலகிரி மாவட்டத்தில் கடந்த 10 ஆண்டுகளில் யானைகள் தாக்கியதில் மட்டும் சுமார் 90 பேர் உயிரிழந்துள்ளனர். வன விலங்குகளின் தாக்குதலிலிருந்து மக்களையும்,  விளைநிலங்களையும் பாதுகாத்திட அறிவியல்ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். வன விலங்குகள் தாக்குதலில் உயிரிழப்போருக்கான நிவாரணத் தொகையை ரூ.10 லட்சமாக உயர்த்தித் தர வேண்டும். 
இக்கோரிக்கைகளை வலியுறுத்தி நீலகிரி மாவட்டத்தில் கூடலூர், பந்தலூர் வட்டாரங்களில் வரும் 27ஆம் தேதி 12 மையங்களில் பெருந்திரள் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்படும். ஜனவரி 28 ஆம் தேதி முதல் பிப்ரவரி 3ஆம் தேதி வரை 200 குழுக்கள்,  25,000 வீடுகளில் வசிக்கும் சுமார் 50,000 மக்களை நேரில் சந்தித்து கூடலூர் பகுதிக்கான பிரச்னைகள் குறித்த மக்கள் சந்திப்பு இயக்கம் நடத்தப்படும் என்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.