தமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!மேக்கேதாட்டு அணை பூமிபூஜை: பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்! செய்யறிவு அடிமைத்தனத்தை தகர்க்க வேண்டும்! போப் லியோ அழைப்பு!முதல்வர் விஜய் நாளை தில்லி பயணம்!முதல்வர் விஜய் நாளை தில்லி பயணம்! குர்மீத் ராம் ரஹீமுக்கு 16 -வது முறையாக பரோல்! அதிமுக எம்.எல்.ஏ. இசக்கி சுப்பையா ராஜிநாமா!அதிமுக எம்.எல்.ஏ-க்கள் ராஜிநாமா செய்த தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!
/

குன்னூரில் சாலைகளில் சுற்றித்திரியும் கால்நடைகளால் வாகன ஓட்டிகள் அவதி

குன்னூரில் பேருந்து நிலையம் உள்ளிட்டப் பகுதிகளில் சுற்றித்திரியும் கால்நடைகளால் வாகன ஓட்டுநர்கள் கடும் சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர்.

Updated On :24 ஜனவரி 2019, 12:30 am IST

குன்னூரில் பேருந்து நிலையம் உள்ளிட்டப் பகுதிகளில் சுற்றித்திரியும் கால்நடைகளால் வாகன ஓட்டுநர்கள் கடும் சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர்.
குன்னூருக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். மேலும்,  குன்னூர் சுற்றுப் பகுதி கிராமங்களில் இருந்து ஏராளமானோர் பல்வேறு தேவைகளுக்காக நகருக்கு வந்துச் செல்கின்றனர். குன்னூரில் அனைத்து சாலைகளும் குறுகிய சாலைகளாகவும், வாகன நெரிசல் மிகுந்த சாலைகளாகவும் உள்ளன. 
இத்தகைய நிலையில் சாலைகளில் கால்நடைகள் சுற்றித்திரிவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மார்க்கெட் கேட்,  பேருந்து நிலையம், ரயில்வே சாலை, டி.டி.கே.சாலை  உள்ளிட்டப் பகுதிகளில் கால்நடைகள் நடமாட்டம்  அதிகரித்துக் காணப்படுகிறது. இதனால், வாகன ஓட்டுநர்கள் கடும் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர். எனவே,  நகராட்சி நிர்வாகம் இப்பிரச்னைக்கு  உரிய தீர்வுகாண வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.