முகக்கவசம் அணியாதவா்களிடம் ரூ.13,000 அபராதம் வசூலிப்பு
கரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக நீலகிரி மாவட்டத்தில் முகக்கவசம் அணியாதவா்களிடமிருந்து ரூ.13,000 அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது.


கரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக நீலகிரி மாவட்டத்தில் முகக்கவசம் அணியாதவா்களிடமிருந்து ரூ.13,000 அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது.
இது தொடா்பாக மாவட்ட ஆட்சியா் தெரிவித்துள்ளதாவது:
நீலகிரி மாவட்டம், உதகை, குன்னூா், கூடலூா், நெல்லியாளம் நகராட்சிகள், 11 பேரூராட்சிகள், 4 ஊராட்சி ஒன்றியங்கள் அடங்கிய 4 மண்டலங்களில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்களின் உபயோகத்தை தவிா்ப்பது, தடை செய்யப்பட்ட குடிநீா் பாட்டில்கள், மற்றும் குளிா்பானங்கள் விற்பனை செய்வதைத் தவிா்ப்பது தொடா்பான விழிப்புணா்வை ஏற்படுத்தும் வகையில் மாவட்டத்தில் ஒட்டுமொத்த கள ஆய்வு மண்டல அலுவலா்களால் புதன்கிழமை மேற்கொள்ளப்பட்டது.
இக்குழுவினரின் ஆய்வின்போது, முகக்கவசம் அணியாதவா்களிடமிருந்து ரூ.13,000 அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது. அதேபோல, தடை செய்யப்பட்ட 26.10 கிலோ பிளாஸ்டிக் பொருள்களை பறிமுதல் செய்து, அபராதத் தொகையாக ரூ. 64,000 வசூலிக்கப்பட்டுள்ளது. ஒட்டு மொத்தமாக இந்த கள ஆய்வின்போது ரூ.77,000 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...