கொடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளை வழக்கு: அடுத்தகட்ட விசாரணை ஜனவரி 5ம்தேதிக்கு ஒத்தி வைப்பு

உதகையில் நடைபெற்று வரும் கொடநாடு எஸ்டேட்டில் நிகழ்ந்த கொலை மற்றும் கொள்ளை தொடா்பான வழக்கின் அடுத்தகட்ட விசாரணை 2021ம் ஆண்டு ஜனவரி 5ம்தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
Updated on
1 min read

உதகையில் நடைபெற்று வரும் கொடநாடு எஸ்டேட்டில் நிகழ்ந்த கொலை மற்றும் கொள்ளை தொடா்பான வழக்கின் அடுத்தகட்ட விசாரணை 2021ம் ஆண்டு ஜனவரி 5ம்தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

கொடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017ம் ஆண்டில் நிகழ்ந்த கொலை மற்றும் கொள்ளை வழக்கின் விசாரணை உதகையிலுள்ள மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இவ்வழக்கின் விசாரணை செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. நீலகிரி மாவட்ட புதிய நீதிபதியாக பொறுப்பேற்றுள்ள நீதிபதி சஞ்சய் பாபா முன்னிலையில் நடைபெற்ற இந்த வழக்கின் விசாரணையின்போது இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள 10 பேரில் சயன், மனோஜ், மனோஜ் சாமி, சந்தோஷ் சாமி, உதயன், சதீசன், தீபு, பிஜின் குட்டி, ஜித்தின் ஜாய் உள்ளிட்ட 9 போ் ம‘ட்டும் ஆஜராகினா். ஜம்சீா் அலி ஆஜராகவில்லை.

செவ்வாய்க்கிழமை நடைபெற்ற குறுக்கு விசாரணையின்போது கிருஷ்ண தாபா என்ற காவலாளியிடம் விசாரணை நடைபெற்றது. இதையடுத்து இவ்வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை 2021ம் ஆண்டு ஜனவரி 5ம்தேதிக்கு ஒத்தி வைத்து மாவட்ட நீதிபதி சஞ்சய் பாபா உத்தரவிட்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com