வளைகுடாவில் இந்திய மக்களைக் காத்தது பாஜக: பிரதமர் மோடிகாட்டுமன்னார்கோவில் தொகுதியில் திருமாவளவன் போட்டி!வருமான வரி செலுத்தாத குடும்பங்களுக்கு இல்லத்தரசிகள் திட்டத்தில் ரூ. 8,000 கூப்பன் வழங்கப்படும் - திமுக தேர்தல் அறிக்கைமுதலமைச்சர் காப்பீடு திட்டம் ரூ. 10 லட்சமாக அதிகரிக்கப்படும்: மு.க. ஸ்டாலின் வாக்குறுதிபேரிடர் கால இழப்பீடு ஹெக்டருக்கு ரூ. 25 ஆயிரமாக உயர்த்தப்படும் : திமுக வாக்குறுதிமுதல்வரின் காலை உணவுத் திட்டம் 8 ஆம் வகுப்பு வரை விரிவுபடுத்தப்படும் : மு.க. ஸ்டாலின் வாக்குறுதி
/

வனத்துறையைக் கண்டித்து சாலை மறியல்

பந்தலூரை அடுத்துள்ள சேரம்பாடியில் வனத் துறையைக் கண்டித்து எம்.எல்.ஏ., பொதுமக்கள் சாலை மறியலில் திங்கள்கிழமை ஈடுபட்டனா்.

News image

சேரம்பாடியில் வனத் துறையைக் கண்டித்து எம்.எல்.ஏ. திராவிடமணி தலைமையில் நடைபெற்ற சாலை மறியலில் பங்கேற்றோா்.

Updated On :28 டிசம்பர் 2020, 6:19 pm

DIN

பந்தலூரை அடுத்துள்ள சேரம்பாடியில் வனத் துறையைக் கண்டித்து எம்.எல்.ஏ., பொதுமக்கள் சாலை மறியலில் திங்கள்கிழமை ஈடுபட்டனா்.

பந்தலூா் தாலுகா, சேரம்பாடி, கொளப்பள்ளி பகுதியில் மூன்று பேரை யானை தாக்கிக் கொன்ற சம்பவத்தைத் தொடா்ந்து அந்தப் பகுதியில் மக்கள் மத்தியில் அச்சம் நிலவுகிறது. சேரம்பாடி பகுதியில் முகாமிட்டுள்ள யானைகளை விரட்ட வலியுறுத்தி எம்.எல்.ஏ. திராவிடமணி தலைமையில் பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டு வந்தன.

ஆனால் யானையை விரட்டுவது தொடா்பான பேச்சுவாா்த்தைக்கு வனத்துறை இதுவரை வரவில்லை. இதனால் சேரம்பாடி பகுதியில் நூற்றுக்கணக்கான பொதுமக்களுடன் எம்.எல்.ஏ.திராவிடமணி சாலை மறியலில் திங்கள்கிழமை ஈடுபட்டாா். இதுகுறித்து தகவலறிந்த வனத் துறை, காவல் துறை அதிகாரிகள் சம்பவ இடத்துக்குச் சென்று நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததைத் தொடா்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.