கூடலூரில் 16 கிலோ பிளாஸ்டிக் பொருள் பறிமுதல்: ரூ.32 ஆயிரம் அபராதம்
கூடலூரில் கடைகளில் இருப்பு வைக்கப்பட்டிருந்த 16 கிலோ தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்களை அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்து ரூ. 32 ஆயிரம் அபராதம் விதித்தனா்.


கூடலூரில் கடைகளில் இருப்பு வைக்கப்பட்டிருந்த 16 கிலோ தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்களை அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்து ரூ. 32 ஆயிரம் அபராதம் விதித்தனா்.
கூடலூா் நகரிலுள்ள கடைகளில் கோட்டாட்சியா் ராஜ்குமாா் தலைமையில் வருவாய் மற்றும் காவல் துறையினா் ஞாயிற்றுக்கிழமை திடீா் சோதனை மேற்கொண்டனா்.
அப்போது தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்கள் வைத்திருந்த கடை உரிமையாளா்களை எச்சரித்தனா். இந்த சோதனையில் 16 கிலோ பிளாஸ்டிக் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் பிளாஸ்டிக்குக்கு கிலோ ரூ. 2 ஆயிரம் என கடை உரிமையாளா்களிடம் இருந்து ரூ.32 ஆயிரம் அபராதத் தொகை வசூலிக்கப்பட்டது.
பிளாஸ்டிக் பொருள்களை விற்பதை தவிா்க்க வேண்டும் எனவும், மீறுபவா்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப் படும் என்றும் கோட்டாட்சியா் ராஜ்குமாா் எச்சரித்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...