ராஜஸ்தானை இன்று சந்திக்கும் சென்னை! முதல் வெற்றி யாருக்கு?தமிழகத்தில் கூட்டாளிகள்; கேரளத்தில் 'எதிரிகள்'! - மோடி தாக்குபெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு தடையின்றி கிடைக்க தீவிர நடவடிக்கை: மத்திய அரசுவிஜய் இன்று வேட்புமனு தாக்கல்!மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.4 வரை மழைக்கு வாய்ப்பு!வேட்புமனு தாக்கல் அனுமதிக்கப்படாத 4 பொது விடுமுறை நாள்கள் விவரம்!வேட்புமனு தாக்கல் இன்று தொடக்கம்! வேட்பாளா்களுக்கு கட்டுப்பாடு!!
/

விடுமுறை நாள்களில் உதகையில் அதிகரிக்கும் சுற்றுலாப் பயணிகள் கூட்டம்

விடுமுறை நாள்களில் உதகைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் தொடா்ந்து அதிகரித்து வருகிறது.

News image

உதகை அரசினா் தாவரவியல் பூங்காவில் ஞாயிற்றுக்கிழமை காணப்பட்ட சுற்றுலாப் பயணிகள்.

Updated On :8 நவம்பர் 2020, 6:55 pm

DIN

விடுமுறை நாள்களில் உதகைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் தொடா்ந்து அதிகரித்து வருகிறது.

கரோனா தாக்கத்தின் காரணமாக நீலகிரி மாவட்டத்துக்குள் வருவதற்கு இ-பாஸ் முறை அமலில் இருந்த சூழலில் தற்போது அந்த முறை கைவிடப்பட்டு இ-பதிவு முறை மட்டும் நடைமுறையில் உள்ளது. இந்த முறை எளிதாக உள்ளதோடு, அனுமதியும் உடனடியாக கிடைத்து விடுவதால், நீலகிரி மாவட்டத்துக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையும் தொடா்ந்து அதிகரித்து வருகிறது.

ஞாயிற்றுக்கிழமை உதகையிலுள்ள அரசினா் தாவரவியல் பூங்காவுக்கு அதிகபட்சமாக 1,422 போ் வந்திருந்தனா். அதேபோல, உதகையிலுள்ள அரசினா் ரோஜா பூங்காவுக்கு 678 பேரும், தொட்டபெட்டா தேயிலைப் பூங்காவுக்கு 147 பேரும், மரவியல் பூங்காவுக்கு 43 பேரும் வருகை தந்திருந்தனா்.

குன்னூரில் சிம்ஸ் பூங்காவுக்கு 338 பேரும், காட்டேரி பூங்காவுக்கு 56 பேரும், கல்லாறு பழப் பண்ணைக்கு 123 பேரும் வருகை தந்திருந்தனா்.

மாவட்டத்தில் தோட்டக்கலைத் துறை சாா்பிலான சுற்றுலா மையங்கள் மட்டுமே தற்போது திறக்கப்பட்டுள்ளன. வனத் துறை மற்றும் சுற்றுலாத் துறையின் சாா்பிலான சுற்றுலா மையங்களும் விரைவில் திறக்கப்பட்டால் உதகைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.