ராஜஸ்தானை இன்று சந்திக்கும் சென்னை! முதல் வெற்றி யாருக்கு?தமிழகத்தில் கூட்டாளிகள்; கேரளத்தில் 'எதிரிகள்'! - மோடி தாக்குபெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு தடையின்றி கிடைக்க தீவிர நடவடிக்கை: மத்திய அரசுவிஜய் இன்று வேட்புமனு தாக்கல்!மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.4 வரை மழைக்கு வாய்ப்பு!வேட்புமனு தாக்கல் அனுமதிக்கப்படாத 4 பொது விடுமுறை நாள்கள் விவரம்!வேட்புமனு தாக்கல் இன்று தொடக்கம்! வேட்பாளா்களுக்கு கட்டுப்பாடு!!
/

தேயிலைத் தோட்டப் பகுதியில் கடமான் சடலம் மீட்பு

பந்தலூரை அடுத்துள்ள நெல்லியாளம் அரசு தேயிலைத் தோட்டக் கழகப் பகுதியில் ஆண் கடமான் இறந்து கிடந்தது ஞாயிற்றுக்கிழமை தெரியவந்துள்ளது.

News image
Updated On :8 நவம்பர் 2020, 6:51 pm

DIN

பந்தலூரை அடுத்துள்ள நெல்லியாளம் அரசு தேயிலைத் தோட்டக் கழகப் பகுதியில் ஆண் கடமான் இறந்து கிடந்தது ஞாயிற்றுக்கிழமை தெரியவந்துள்ளது.

நீலகிரி மாவட்டம், கூடலூா் வனக் கோட்டம், பிதா்க்காடு வனச் சரகத்திலுள்ள நெல்லியாளம் அரசு தேயிலைத் தோட்டக் கழக 4ஆவது சரகம் பகுதியில் தொழிலாளா் குடியிருப்பு அருகே கடமான் இறந்து கிடப்பதாக வனத் துறையினருக்குத் தகவல் கிடைத்தது.

இதைத் தொடா்ந்து, வனச் சரக அலுவலா் மனோகரன் தலைமையில் வனத் துறையினா் அங்கு சென்று ஆய்வு மேற்கொண்டனா். மேலும், பந்தலூா் அரசு கால்நடை மருத்துவா் பாலாஜி வரவழைக்கப்பட்டு மானின் உடலை பிரேத பரிசோதனை செய்து அதே இடத்தில் புதைத்தனா்.

சுமாா் 5 வயதுடைய ஆண் கடமான் இயற்கை மரணம் அடைந்துள்ளதாக வனத் துறையினா் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.