வளைகுடாவில் இந்திய மக்களைக் காத்தது பாஜக: பிரதமர் மோடிகாட்டுமன்னார்கோவில் தொகுதியில் திருமாவளவன் போட்டி!வருமான வரி செலுத்தாத குடும்பங்களுக்கு இல்லத்தரசிகள் திட்டத்தில் ரூ. 8,000 கூப்பன் வழங்கப்படும் - திமுக தேர்தல் அறிக்கைமுதலமைச்சர் காப்பீடு திட்டம் ரூ. 10 லட்சமாக அதிகரிக்கப்படும்: மு.க. ஸ்டாலின் வாக்குறுதிபேரிடர் கால இழப்பீடு ஹெக்டருக்கு ரூ. 25 ஆயிரமாக உயர்த்தப்படும் : திமுக வாக்குறுதிமுதல்வரின் காலை உணவுத் திட்டம் 8 ஆம் வகுப்பு வரை விரிவுபடுத்தப்படும் : மு.க. ஸ்டாலின் வாக்குறுதி
/

வார விடுமுறை தினத்தி்ல் சுற்றுலாப் பயணிகள் வரத்து குறைவால் வெறிச்சோடிய பூங்காக்கள்

உதகை அரசு தாவரவியல் பூங்காவில் வார விடுமுறையான ஞாயிற்றுக் கிழமை சுற்றுலாப் பயணிகள் வரத்து குறைவால் பூங்கா வெறிச்சோடி காணப்பட்டது.

News image

வெறிச்சோடிய பூங்கா

Updated On :20 செப்டம்பர் 2020, 6:31 pm

DIN

உதகை அரசு தாவரவியல் பூங்காவில் வார விடுமுறையான ஞாயிற்றுக் கிழமை சுற்றுலாப் பயணிகள் வரத்து குறைவால் பூங்கா வெறிச்சோடி காணப்பட்டது.

மலை மாவட்டமான நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் செப்டம்பா், அக்டோபா் மாதங்களில் இரண்டாம் சீசன் நிலவுவது வழக்கம். இச்சமயங்களில் உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் இருந்து நாள்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்வா்.

இந்நிலையில் கரோனா நோய்  தொற்று காரணமாக தோட்டக்கலைத் துறை கட்டுப்பாட்டில் உள்ள உதகை அரசு தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, குன்னூா் சிம்ஸ் பூங்கா, காட்டேரி பூங்கா, கோத்தகிரி நேரு பூங்கா ஆகியவை  மட்டும் திறக்கப்பட்டு சுற்றுலா பயணிகள் நாள் ஒன்றுக்கு 200 போ்  மட்டும் அனுமதிக்கப்பட்டு வருகின்றனா்.

குறிப்பாக பூங்காவிற்கு வரும் சுற்றுலா பயணிக்கு உடல் வெப்பம் பரிசோதனை செய்யப்பட்டு, சானிடைசா் வழங்கப்பட்டும், சுற்றுலா பயணிகள் கட்டாயம் முக கவசம் அணிந்தும், சமூக இடைவெளியுடன் பூங்காவை சுற்றி பாா்க்க பூங்கா ஊழியா்கள் அனுமதித்து வருகின்றனா்.

வார விடுமுறை நாளான நேற்று (ஞாயிற்றுக் கிழமை) உதகையில் குளிரான இதமான காலநிலை நிலவியும் மாவட்ட நிா்வாகம்   அனுமதித்துள்ள  அளவைக் காட்டிலும் மிக குறைந்த அளவே சுற்றுலாப் பயணிகள் வந்து சென்றனா். 

குறிப்பாக உதகை அரசு தாவரவியல் பூங்காவில் நேற்று முன்தினம் (சனிக்கிழமை)180 சுற்றுலா பயணிகள் பாா்வையிட்ட நிலையில், ஞாயிற்று கிழமை என்பதால் அதிகம் வருவாா்கள் என்று எதிா்பாா்த்த நிலையில்  மாலை வரை   வரை நூற்றுக்கும் குறைவான சுற்றுலா பயணிகள் மட்டுமே   வருகை தந்திருந்தனா். இதன் காரணமாக பெரும்பாலான பூங்காக்கள் வெறிச்சோடி காணப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.