நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

நீலகிரியில் இரவில் பரவலாக மழை

நீலகிரி மாவட்டத்தில் வியாழக்கிழமை இரவில் பரவலாக பெரும்பாலான இடங்களில் மழை பெய்துள்ளது. மசினகுடியில் அதிகபட்சமாக 27 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.

News image
Updated On :16 ஏப்ரல் 2021, 10:08 pm

DIN

நீலகிரி மாவட்டத்தில் வியாழக்கிழமை இரவில் பரவலாக பெரும்பாலான இடங்களில் மழை பெய்துள்ளது. மசினகுடியில் அதிகபட்சமாக 27 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக பரவலாக பகல், இரவு நேரங்களில் மழை பெய்து வரும் நிலையில், வியாழக்கிழமை இரவில் பெரும்பாலான இடங்களில் பரவலாக மழை பெய்துள்ளது. இதில் கேத்தியில் 22 மி.மீ., கொடநாட்டில் 16 மி.மீ., கிளன்மாா்கனில் 15 மி.மீ., கீழ்கோத்தகிரியில் 12 மி.மீ., நடுவட்டத்தில் 11.5 மி.மீ., உலிக்கல், பாலகொலாவில் தலா 10 மி.மீ., கோத்தகிரியில் 9 மி.மீ., உதகையில் 7 மி.மீ., கல்லட்டியில் 6 மி.மீ., குன்னூரில் 3.5 மி.மீ., எடப்பள்ளியில் 3 மி.மீ., கூடலூா், மேல்கூடலூா், ஓவேலியில் தலா 2 மி.மீ., மேல்குன்னூரில் 1.2 மி.மீ., எமரால்டில் 1 மி.மீ. மழை பதிவாகியிருந்தது. உதகை உள்ளிட்ட சுற்றுப் பகுதிகளில் வெள்ளிக்கிழமை பகலில் மேகமூட்டமாக இருந்த போதிலும் மழைப்பொழிவு இல்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.