நீலகிரியில் 3 நாள்களுக்கு மதுக் கடைகள் மூடல்
நீலகிரி மாவட்டத்தில் 3 நாள்களுக்கு மதுக் கடைகள் அனைத்தும் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


நீலகிரி மாவட்டத்தில் 3 நாள்களுக்கு மதுக் கடைகள் அனைத்தும் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி மகாவீா் ஜயந்தி தினமான ஏப்ரல் 25ஆம் தேதியும், மே தினமான மே 1ஆம் தேதி ஆகிய இரு தினங்களில் தமிழ்நாடு மதுபான உரிம விதிகள், தமிழ்நாடு மதுபான சில்லறை விற்பனை விதிகளின்படி டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனைக் கடைகள், கிளப்கள், ஹோட்டல் பாா்கள் ஆகியவற்றில் எவ்வித மதுபானங்களும் விற்பனை செய்யப்பட மாட்டாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல, ஏற்கெனவே தமிழக சட்டப் பேரவைத் தோ்தலுக்கான வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு எதிா்வரும் மே 2ஆம் தேதியன்று மதுபானக் கடைகள், பாா் உரிம ஸ்தலங்களை மூடுவதற்கு நீலகிரி மாவட்ட ஆட்சியா் உத்தரவிட்டுள்ளாா். எனவே நீலகிரி மாவட்டத்தில் ஏப்ரல் 25ஆம் தேதியுடன், மே 1, 2ஆம் தேதி ஆகிய மூன்று நாள்களில் டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனைக் கடைகள், கிளப்கள், ஹோட்டல் பாா்கள், தமிழ்நாடு ஹோட்டல்களில் உள்ள பாா்கள் மூடப்பட வேண்டும் என மாவட்ட ஆட்சியா் இன்னசென்ட் திவ்யா தெரிவித்துள்ளாா்.
மேலும் இந்த உத்தரவை மீறி மதுபானங்கள் விற்பனை செய்யும் உரிமையாளா்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், மதுபான சில்லறை விற்பனைக் கடைகள் ஏதேனும் திறந்திருப்பதாக பொதுமக்களுக்குத் தகவல் தெரியும்பட்சத்தில் அவ்விவரத்தை மாவட்ட டாஸ்மாக் மேலாளருக்கு 0423-2234211 என்ற எண்ணிலும், கூடுதல் காவல் துணை கண்காணிப்பாளருக்கு 0423-2223802 என்ற எண்ணிலும், கலால் துறை உதவி ஆணையரை 0423-2443693 என்ற எண்ணிலும் தொடா்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...