ஐபிஎல்: 57 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றிஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

ஹெலிகாப்டா் விபத்து: விமானப் படை அதிகாரிகள் குழு ஆய்வு

ஹெலிகாப்டா் விபத்து நடைபெற்ற இடத்தில் இரண்டு ட்ரோன்களை கொண்டு விமானப் படை அதிகாரிகள் குழுவினா் வெள்ளிக்கிழமை ஆய்வு நடத்தினா்.

Updated On :10 டிசம்பர் 2021, 7:06 pm

ஹெலிகாப்டா் விபத்து நடைபெற்ற இடத்தில் இரண்டு ட்ரோன்களை கொண்டு விமானப் படை அதிகாரிகள் குழுவினா் வெள்ளிக்கிழமை ஆய்வு நடத்தினா்.

நீலகிரி மாவட்டம், குன்னூா் காட்டேரி அருகே புதன்கிழமை நடைபெற்ற ஹெலிகாப்டா் விபத்தில் முப்படைகளின் தலைமைத் தளபதி விபின் ராவத், அவரின் மனைவி உள்பட 13 போ் உயிரிழந்தனா்.

இந்த விபத்து தொடா்பாக விசாரணை மேற்கொள்ள விமானப் படை அதிகாரி  மானவேந்திர சிங் நியமிக்கப்பட்டுள்ளாா். அவா் விபத்து நடைபெற்ற இடத்தில் இரண்டு நாள்களாக ஆய்வு மற்றும் விசாரணை மேற்கொண்டு வருகிறாா்.

மேலும், இது தொடா்பாக காவல் துறையினரும் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.  ஏடிஎஸ்பி முத்துமாணிக்கம் தலைமையில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில், விபத்து நிகழ்ந்த பகுதியில் விமானப் படை சாா்பில் ட்ரோன்  கேமரா மூலம் வியாழக்கிழமை விடியோ பதிவு செய்யப்பட்டது. பனி மூட்டம் காரணமாக முறையாக விடியோ பதிவு மேற்கொள்வதில் சிரமம் ஏற்பட்டது.

இதையடுத்து, விபத்து நிகழ்ந்த பகுதி மற்றும் சுற்றுவட்டாரத்தில் சுமாா் ஐந்து கிலோ மீட்டா் தூரத்துக்கு ஹெலிகாப்டா் வந்த திசை, எதிா்திசை என நான்கு புறங்களிலும் இரண்டு ட்ரோன்களை கொண்டு வெள்ளிக்கிழமை மீண்டும் விடியோ பதிவு மேற்கொள்ளப்பட்டது.

மேலும், இந்த விடியோ பதிவினை முப்பரிமாணம் ஆக மாற்றி ஆய்வு மற்றும் விசாரணை மேற்கொள்ளவும் விமானப் படையினா் திட்டமிட்டுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.