கூடலூர் அருகே வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றி மக்கள் போராட்டம்
கூடலூர் அருகே காட்டு யானைகளிடமிருந்து பாதுகாப்பு வழங்க வலியுறுத்தி வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றி மக்கள் போராட்டம் நடத்தினர்.


கூடலூர் அருகே காட்டு யானைகளிடமிருந்து பாதுகாப்பு வழங்க வலியுறுத்தி வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றி மக்கள் போராட்டம் நடத்தினர்.
நீலகிரி மாவட்டம், கூடலூர் அடுத்துள்ள தேவர் சோலை பேரூராட்சிக்குட்பட்ட பாடந்தொரை மற்றும் அதனை சுற்றியுள்ள கிராங்களில் கடந்த சில மாதங்களாக இரண்டு காட்டு யானைகள் வீடுகளை தாக்கி சேதப்படுத்தி தானியங்கள் உள்ளிட்ட உணவுப் பொருட்களை சாப்பிட்டுவிட்டு மீதமுள்ள உணவுப் பொருட்களை கொட்டி இறைத்துவிட்டு செல்கின்றன.

இதையும் படிக்க- நாடாளுமன்ற தாக்குதல் நாள்: எம்.பி.க்கள் அஞ்சலி
பகல் நேரங்களிலும், காலை வேளையிலும் விளை பயிர்களை சேதப்படுத்துவதுடன் சாலைகளிலும் நடந்து செல்கிறது. சில நேரங்களில் வீடுகளுக்கு அருகேயும் வந்து நிற்கிறது. இதனால் பொதுமக்கள் பெரும் அச்சத்தில் உறைத்துள்ளனர். வனத்துறைக்கு கோரிக்கை வைத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.

எனவே அரசின் கவனத்தை ஈர்க்க வீடுகளிலும் சானலயிலும் கருப்புக்கொடி ஏற்றி போராட்டம் நடத்தி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...