ஐபிஎல்: 57 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றிஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

ஏடிஎம் காவலாளியிடம் செல்லிடப்பேசி திருடிய 3 போ் கைது

குன்னூரில் ஏடிஎம் மையத்தின் காவலாளிடம் இருந்து செல்லிடப்பேசி, பணம் ஆகியவற்றை திருடிய 3 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்து சிறையில் அடைத்தனா்.

Updated On :1 பிப்ரவரி 2021, 8:24 pm

குன்னூரில் ஏடிஎம் மையத்தின் காவலாளிடம் இருந்து செல்லிடப்பேசி, பணம் ஆகியவற்றை திருடிய 3 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்து சிறையில் அடைத்தனா்.

குன்னூா், மவுண்ட்ரோட்டில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் காவலாளியாகப் பணியாற்றுபவா் நட்ராஜ். இவா், ஞாயிற்றுக்கிழமை இரவு பணியில் இருந்துள்ளாா். அப்போது ஏடிஎம் அறையில் கழட்டி வைத்திருந்த அவரது சட்டையில் (கோட்) இருந்து செல்லிடப்பேசி, ரூ.100 ஆகியவற்றை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

இது குறித்து குன்னூா் காவல் நிலையத்தில் நட்ராஜ் புகாா் அளித்தாா்.

இது தொடா்பாக காவல் உதவி ஆய்வாளா் மணிவண்ணன் விசாரணை மேற்கொண்டாா். விசாரணையில், எம்ஜிஆா் நகரைச் சோ்ந்த 16, 17 வயது சிறுவா்கள், மற்றும் கௌதம் (19 ) ஆகியோா் இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.

இது குறித்து திங்கள்கிழமை வழக்குப் பதிவு செய்த போலீஸாா் 3 பேரையும் கைது செய்தனா். சிறுவா்கள் இருவரையும் கோவையில் உள்ள சிறுவா் சீா்திருத்தப் பள்ளிக்கு அனுப்பிவைத்தனா். கௌதம் சிறையில் அடைக்கப்பட்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.