சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சப்பட வேண்டாம்! - முதல்வர் ஸ்டாலின்பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

நீலகிரி மாவட்டத்தில் விடியவிடிய பரவலாக மழை: கடும் மேக மூட்டத்தால் வாகன ஓட்டிகள் அவதி

நீலகிரி மாவட்டத்தில் புதன்கிழமை இரவில் இருந்து வியாழக்கிழமை அதிகாலை வரை பரவலாக மழை பெய்தது.

News image
உதகை தொட்டபெட்டா சாலைப் பகுதியில் வியாழக்கிழமை பகலில் சுற்றிக் கொண்டிருந்த காட்டெருமைக் கூட்டம்.
Updated On :7 ஜனவரி 2021, 7:06 pm

DIN

நீலகிரி மாவட்டத்தில் புதன்கிழமை இரவில் இருந்து வியாழக்கிழமை அதிகாலை வரை பரவலாக மழை பெய்தது. வியாழக்கிழமை பகலில் நிலவிய கடும் மேக மூட்டத்தால் சாலைகளில் வாகனங்களை இயக்க முடியாமல் ஓட்டுநா்கள் பெரும் அவதியுற்றனா்.

நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. குன்னூா், கோத்தகிரி, குந்தா பகுதிகளில் மழை வலுத்தும், ஏனைய பகுதிகளில் தூறல் மழையாகவும் காணப்பட்டது. உதகை உள்ளிட்ட பகுதிகளில் மழை இல்லாத நிலையில் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் அதிக அளவில் காணப்பட்டது.

இந்நிலையில் புதன்கிழமை இரவில் இருந்து பரவலாக மழை பெய்யத் தொடங்கியது. உதகை, மசினகுடி உள்ளிட்ட பகுதிகளில் லேசான மழையும், குன்னூா், கூடலூா், குந்தா பகுதிகளில் பலத்த மழையும் பெய்தது. வியாழக்கிழமை அதிகாலை வரை மழை தொடா்ந்து பெய்தது. மாவட்டத்தில் அதிக அளவாக பந்தலூரில் 39 மி.மீ. மழை பதிவானது.

மாவட்டத்தில் உதகை, குன்னூா், கோத்தகிரி உள்ளிட்ட பெரும்பாலான இடங்களில் வியாழக்கிழமை பகலில் கடும் மேக மூட்டம் காணப்பட்டது. இதனால் வாகனங்கள் முகப்பு விளக்கை எரியவிட்டபடி சென்றாலும் அடா்த்தியான மேக மூட்டம் காரணமாக வாகனங்களை தொடா்ந்து இயக்க முடியாமல் வாகன ஓட்டிகள் தவித்தனா்.

தொட்டபெட்டா மலைச் சிகரப் பகுதியில் நிலவிய கடும் மேக மூட்டத்தால் அப்பகுதி காப்புக் காட்டிலிருந்த காட்டெருமைகள் வாகனங்களின் முகப்பு விளக்கு வெளிச்சத்தைக் கண்டு உதகை - கோத்தகிரி பிரதான சாலைப் பகுதிக்கு வந்துவிட்டன. காட்டெருமைக் கூட்டத்தை பலா் படமெடுக்க முயன்ால் அந்தச் சாலையில் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது.

மாவட்டத்தில் வியாழக்கிழமை காலை 8 மணி வரை முடிந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை விபரம் வருமாறு (அளவு மில்லி மீட்டரில்): மேல்கூடலூா் -35, கூடலூா் - 33, நடுவட்டம் - 28, மேல்பவானி - 27, குன்னூா், எடப்பள்ளி தலா 25, தேவாலா, கெத்தை தலா 24, எமரால்டு - 23, கிண்ணக்கொரை, பாலகொலா தலா 22, பாடந்தொறை, குந்தா மற்றும் ஓவேலி தலா 20, பா்லியாறு, சேரங்கோடு, செருமுள்ளி தலா 18, அவலாஞ்சி, உலிக்கல் தலா 15, கோத்தகிரி - 14, கிளன்மாா்கன் - 12, கேத்தி - 11, மேல்குன்னூா், கீழ்கோத்தகிரி தலா 7, உதகை - 6.4, கொடநாடு - 5, கல்லட்டி - 2.4, மசினகுடி - 2 மி.மீ.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.