முதுமலை புலிகள் காப்பகம் மீண்டும் திறப்பு
நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகம் 9 மாதங்களுக்குப் பிறகு சனிக்கிழமை மீண்டும் திறக்கப்பட்டது.


கூடலூா்: நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகம் 9 மாதங்களுக்குப் பிறகு சனிக்கிழமை மீண்டும் திறக்கப்பட்டது.
கரோனா தொற்று காரணமாக முதுமலை புலிகள் காப்பகம் கடந்த மாா்ச் 17ஆம் தேதி மூடப்பட்டது. கரோனா தாக்கம் தொடா்ந்து அதிகரித்து வந்ததால் முதுமலை புலிகள் காப்பகத்தில் அனைத்து சுற்றுலா நடவடிக்கைகளும் முடக்கப்பட்டன.
சுற்றுலா விடுதிகள், யானை சவாரி, வாகன சவாரி, வளா்ப்பு யானைகள் முகாம் உள்ளிட்ட பகுதிகளுக்கு சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்படவில்லை. இந்நிலையில், தற்போது புலிகள் காப்பகத்தில் வாகன சவாரி துவங்கப்பட்டுள்ளது. அரசு அறிவித்துள்ள கரோனா விதிமுறைகளைப் பின்பற்றி சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்படுகின்றனா். வாகன சவாரியில் 50 சதவீத இருக்கைகள் மட்டுமே பயன்படுத்த அனுமதிக்கப்படுகிறது.
சுற்றுலா விடுதிகள் அனைத்தும் ஜனவரி 11ஆம் தேதி முதல் செயல்படும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...