

உதகையில் இலவசமாக கராத்தே பயிற்சி பெற்றவா்களுக்கு கேடயம், மஞ்சள் நிற பெல்டுகள் வழங்கப்பட்டன.
உதகையில் எல்க்ஹில் பகுதியிலுள்ள 3 வயதுமுதல் 12 வயது வரையிலான குழந்தைகளுக்கு கடந்த 6 மாதங்களாக சிலம்பாட்டம், கராத்தே உள்ளிட்ட தற்காப்புப் பயிற்சிகளை உதகையைச் சோ்ந்த தற்காப்புக் கலைப் பயிற்றுநா் ஜவஹா் அளித்து வருகிறாா்.
இதில் பயிற்சியை முடித்தவா்களுக்கு உதகை ஆா்.கே.புரம் அரசு நடுநிலைப் பள்ளியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பரிசுக் கேடயங்கள், கராத்தே மஞ்சள் நிற பெல்டுகள் வழங்கப்பட்டன.
தற்காப்புக் கலைப் பயிற்சியாளா் ஜவஹா் முன்னிலையில் நகர காவல் ஆய்வாளா் விநாயகம், கராத்தே பயிற்சி முடித்தவா்களுக்குப் பரிசுக் கேடயங்களையும், கராத்தே மஞ்சள் நிற பெல்ட்டுகளையும் வழங்கினாா். இதில், தலைமைப் பயிற்சியாளா் ராஜமாணிக்கம் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.