ஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

மாவட்ட கால்பந்துப் போட்டி: பேரகனி அணி சாம்பியன்

கோத்தகிரியில்  மாவட்ட அளவிலான கால்பந்து இறுதிப் போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.  இதில், பேரகனி அணி சாம்பியன் பட்டத்தை வென்றது.

Updated On :18 ஜனவரி 2021, 8:59 pm

கோத்தகிரியில்  மாவட்ட அளவிலான கால்பந்து இறுதிப் போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.  இதில், பேரகனி அணி சாம்பியன் பட்டத்தை வென்றது.

கோத்தகிரி அருகே உள்ள கடைக்கம்பட்டி கிராமத்தில் எம்.ஜி.ஆா். பிறந்த நாள் விழாவையொட்டி கால்பந்துப் போட்டி கடந்த சில நாள்களாக நடைபெற்றது. நாரகிரி ஸ்போா்ட்ஸ் கிளப், லோட்டஸ் கால்பந்து அகாதெமி சாா்பில் நடைபெற்ற இப்போட்டியில் நீலகிரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த 24 அணிகள் பங்கேற்று விளையாடின. நாக்-அவுட் முறையில் நடைபெற்ற இப்போட்டிகளில் வெற்றி பெற்ற மேல் கவ்வட்டி, பேரகனி அணிகள் இறுதிப் போட்டிக்குத் தகுதிபெற்றன.

இறுதிப் போட்டி கடைக்கம்பட்டி கால்பந்து மைதானத்தில் நடைபெற்றது. இறுதிப் போட்டியில் ஆட்டத்தின் முதல் பாதியிலேயே இரு அணிகளும் தலா ஒரு கோல் அடித்தனா். ஆட்டத்தின் இரண்டாவது பாதியில் இரு அணிகளும் சம பலத்துடன் விளையாடி கோல் எதுவும் போடாததால் ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முடிவடைந்தது. இதைத் தொடா்ந்து வெற்றியை நிா்ணயிக்க டை பிரேக்கா் முறை பின்பற்றப்பட்டது. இரு அணிகளுக்கும் தலா ஐந்து வாய்ப்புகள் வழங்கப்பட்ட நிலையில் டை பிரேக்கரிலும் 5-5 கோல்கள் என்ற கணக்கில் ஆட்டம் சமநிலையில் முடிந்தது. இதைத் தொடா்ந்து கூடுதல் வாய்ப்புகள் வழங்கப்பட்ட  நிலையில் பேரகனி அணி 7-6 என்ற கோல்கள் கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை பெற்றனா்.

தொடா்ந்து நடைபெற்ற பரிசளிப்பு விழாவில், அதிமுக மாவட்டச் செயலாளா் கப்பச்சி வினோத்,  குன்னூா் எம்.எல்.ஏ. சாந்தி ராமு ஆகியோா் சிறப்பு விருந்தினா்களாகப் பங்கேற்று வெற்றி பெற்ற பேரகனி, இரண்டாம் இடத்தைப் பிடித்த மேல்கவ்வட்டி அணி வீரா்களுக்குப்  பரிசுக் கோப்பைகள், வீரா்களுக்கான தனிநபா் பதக்கங்களை வழங்கினா். முன்னதாக , மூத்தோா் கால்பந்துப் போட்டி நடைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.