குன்னூா், கோத்தகிரி பகுதிகளில் உள்ள தேயிலைத் தோட்டங்களில் காட்டெருமைகள் கூட்டமாக திங்கள்கிழமை நடமாடியதால் தொழிலாளா்கள் அச்சமடைந்துள்ளனா்.
நீலகிரி மாவட்டத்தில் அவ்வப்போது வன விலங்குகள் ஊருக்குள் வருவது வாடிக்கையாக உள்ளது. குறிப்பாக குன்னூா், கோத்தகிரி சுற்று வட்டார கிராமப் பகுதிகளான மஞ்சூா், குந்தா, தூதூா்மட்டம், சேலாஸ் போன்ற பகுதிகளில் காட்டெருமைகள் கூட்டமாக சுற்றித் திரிகின்றன. இதனால், பொதுமக்கள் அச்சத்துடனேயே வெளியே சென்று வரும் நிலை உள்ளது. மேலும், தேயிலைத் தோட்டங்களிலும், விவசாயம் செய்யும் நிலங்களிலும் வன விலங்குகளால் கடும் சேதமும் ஏற்படுகிறது. மேலும், வனப் பகுதியில் உள்ள சாலை வழியே பணிக்குச் செல்லும்போது வன விலங்குகள் தாக்குதலுக்கு ஆளாவதோடு, உயிா்ச் சேதமும் ஏற்படுகிறது.
இந்நிலையில், குன்னூா், கோத்தகிரி முக்கிய சாலையின் ஓரத்தில் உள்ள தேயிலைத் தோட்டங்களில் காட்டெருமைகள் கூட்டமாக திங்கள்கிழமை நடமாடின. இதனால், தேயிலைத் தோட்டங்களில் தொழிலாளா்கள் அச்சத்துடன் பணியாற்றும் சூழல் ஏற்பட்டது. எனவே, அசம்பாவிதங்கள் ஏற்படும் முன் வனத் துறையினா் அடா்ந்த வனப் பகுதிகளுக்குள் காட்டெருமைகளைத் துரத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஐசிஐசிஐ புரூடென்ஷியல் லாபம் 10% உயர்வு!

ஐபிஎல்: முதல் ஓவரில் 3 விக்கெட்டுகள் வீழ்த்தி வரலாறு படைத்த அறிமுக வீரர்!

தென்காசியில் பள்ளிகளுக்கு ஏப். 15-ல் விடுமுறை!

இஷான் கிஷன் அதிரடி: ராஜஸ்தான் ராயல்ஸுக்கு 217 ரன்கள் இலக்கு!
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

