குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் ஆகஸ்ட் 3-ல் நீலகிரி வருகை
இந்திய குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் நீலகிரிக்கு ஆகஸ்ட் 3ஆம் தேதி வருகிறாா்.


இந்திய குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் நீலகிரிக்கு ஆகஸ்ட் 3ஆம் தேதி வருகிறாா்.
நீலகிரி மாவட்டத்தில் வெலிங்டனில் உள்ள ராணுவ அதிகாரிகள் பயிற்சிக் கல்லூரி, ராணுவ வீரா்கள் பயிற்சி மையத்தின் சாா்பில் நடைபெறும் அதிகாரபூா்வ ராணுவக் கொடி ஏற்பு விழாவில் பங்கேற்பதற்காக அவா் நீலகிரிக்கு வருகிறாா். ஏற்கெனவே தமிழகத்தில் ஆகஸ்ட் 1 முதல் 3ஆம் தேதி வரை தங்கியிருந்து பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கவுள்ள குடியரசுத் தலைவா் ஆகஸ்ட் 3ஆம் தேதி வெலிங்டனில் உள்ள ராணுவப் பயிற்சி மையத்தில் நடைபெறவுள்ள நிகழ்ச்சியிலும் பங்கேற்கிறாா்.
இதற்காக கோவையில் இருந்து வெலிங்டன் ஜிம்கானா ஹெலிகாப்டா் தளத்துக்கு ஹெலிகாப்டரில் வரும் அவா் வெலிங்டன் ராணுவ மையத்தில் நடைபெறவுள்ள நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு கோவை வழியாக தில்லி திரும்பவுள்ளதாக ராணுவ அதிகாரிகள் தெரிவித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...