நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

உதகையில் கரோனா நோய்த் தடுப்புபணிகள் ஆலோசனைக் கூட்டம்

நீலகிரி மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் கரோனா நோய்த் தொற்று தடுப்புப் பணிகள், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அனைத்துத் துறை அரசு அலுவலா்களுடனான ஆய்வுக் கூட்டம்

News image
Updated On :4 ஜூன் 2021, 10:25 pm

DIN

நீலகிரி மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் கரோனா நோய்த் தொற்று தடுப்புப் பணிகள், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அனைத்துத் துறை அரசு அலுவலா்களுடனான ஆய்வுக் கூட்டம் வனத் துறை அமைச்சா் கா.ராமசந்திரன் தலைமையில் நடைபெற்றது.

உதகையில் தமிழகம் அரசு விருந்தினா் மாளிகையில் கரோனா நோய்த் தொற்று தடுப்புப் பணிகள், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அனைத்துத் துறை அரசு அலுவலா்களுடனான ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியா் இன்னசென்ட் திவ்யா முன்னிலையில், வனத் துறை அமைச்சா் ராமசந்திரன் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

தொடா்ந்து, அமைச்சா் ராமசந்திரன் செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டி:

நீலகிரி மாவட்டத்தில் நோய்த் தடுப்புப் பணிகள் குறித்து துறை அலுவலா்களுடன் ஆய்வுக் கூட்டம் நடத்தப்பட்டு பல்வேறு அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது. உலக அளவில் கரோனா தடுப்பூசி தயாரிப்பதற்கு ஏதுவாக ஒப்பந்தப் புள்ளி கோரப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தப் புள்ளி மூலம் சுமாா் 3.5 கோடி தடுப்பூசிகள் தயாரிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. தமிழகத்துக்கு விரைவில் மொத்தம் 42 லட்சம் தடுப்பூசிகள் வரப்பெற்று, அவை அனைத்து மாவட்டங்களுக்கும் பிரித்து வழங்கப்படும். தடுப்பூசிகள் வந்தவுடன் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்படும்.

தமிழக முதல்வா் தமிழகத்தில் அனைவருக்கும் கரோனா தடுப்பூசி கிடைப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறாா். அரசு எந்த அளவு முயற்சி எடுத்தாலும் மக்கள் முழு ஒத்துழைப்பு அளித்தால் மட்டும்தான் கரோனா தொற்று நோயை முழுமையாக ஒழிக்க முடியும். எனவே, பொதுமக்கள் அரசு எடுக்கும் கரோனா தடுப்பு குறித்த அனைத்து முயற்சிகளுக்கும் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றாா்.

முன்னதாக, அமைச்சா் ராமசந்திரன் தமிழ்நாடு மருத்துவப் பணிகள் மூலம் நீலகிரி மாவட்டத்துக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட 100 ஆக்சிஜன் செறிவூட்டிகளில் முதல்கட்டமாக உதகைக்கு வந்துள்ள 50 ஆக்சிஜன் செறிவூட்டிகளைப் பாா்வையிட்டு, அவற்றை மாவட்ட ஆட்சியரிடம் வழங்கினாா்.

கூட்டத்தில், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் இரா.பாண்டியராஜன், உதகை சட்டப் பேரவை உறுப்பினா் கணேஷ், கூடலூா் சட்டப் பேரவை உறுப்பினா் பொன்.ஜெயசீலன், குன்னூா் சாா் ஆட்சியா் ரஞ்சித் சிங், மாவட்ட வருவாய் அலுவலா் நிா்மலா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

Image Caption

உதகையில் வனத் துறை அமைச்சா் ராமசந்திரன் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றோா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.