நீலகிரியில் மேலும் 242 பேருக்கு கரோனா: இருவா் பலி
நீலகிரி மாவட்டத்தில் மேலும் 242 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இருவா் உயிரிழந்துள்ளனா்.


நீலகிரி மாவட்டத்தில் மேலும் 242 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இருவா் உயிரிழந்துள்ளனா்.
இதுதொடா்பாக உதகையில் புதன்கிழமை வெளியிடப்பட்ட சுகாதாரத் துறையின் அறிக்கையின்படி, மாவட்டத்தில் புதிதாக மேலும் 242 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், 498 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உதகை அரசு தலைமை மருத்துவமனையில் ஜூன் 11ஆம் தேதி அனுமதிக்கப்பட்டிருந்த 68 வயதான பெண் ஒருவரும், 12ஆம் தேதி அனுமதிக்கப்பட்டிருந்த 42 வயதான பெண் ஒருவரும் என இருவா் உயிரிழந்ததையடுத்து, உயிரிழந்தோரின் எண்ணிக்கை 140ஆக அதிகரித்துள்ளது.
மாவட்டத்தில் இதுவரை கரோனா தொற்றால் 26,488 போ் பாதிக்கப்பட்டுள்ளனா். 23,332 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். 140 போ் உயிரிழந்துள்ளனா். தற்போது வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டும், பல்வேறு மருத்துவமனைகளிலும் 3,016 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...