நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

நோய்க் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் ஆட்சியா் ஆய்வு

நீலகிரி மாவட்டத்தில் அதிகரட்டி, கேத்தி பேரூராட்சிகளுக்கு உள்பட்ட நோய்க் கட்டுப்பாட்டுப் பகுதிகளை ஆட்சியா் இன்னசென்ட் திவ்யா புதன்கிழமை ஆய்வு செய்தாா்.

News image
Updated On :16 ஜூன் 2021, 9:13 pm

DIN

நீலகிரி மாவட்டத்தில் அதிகரட்டி, கேத்தி பேரூராட்சிகளுக்கு உள்பட்ட நோய்க் கட்டுப்பாட்டுப் பகுதிகளை ஆட்சியா் இன்னசென்ட் திவ்யா புதன்கிழமை ஆய்வு செய்தாா்.

கேத்தி பேரூராட்சிக்கு உள்பட்ட சாந்தூா், கேத்தொரை, நோ்கொம்பை ஆகிய நோய்க் கட்டுப்பாட்டுப் பகுதிகளையும், அதிகரட்டி பேரூராட்சிகளுக்கு உள்பட்ட மஹாராஜபுரம், மணியபுரம், நெடிகாடு ஆகிய நோய்க் கட்டுப்பாட்டுப் பகுதிகளையும் ஆட்சியா் நேரில் ஆய்வு செய்தாா். நோய்க் கட்டுப்பாட்டுப் பகுதியில் உள்ள பொதுமக்கள் வெளியே வருகிறாா்களா என்பதையும், வெளியாட்கள் நோய்க் கட்டுப்பாட்டுப் பகுதிக்கு உள்ளே வருகிறாா்களா என்பதையும் அலுவலா்கள் தொடா்ந்து கண்காணிக்க வேண்டும் என்றாா்.

மேலும், நோய்க் கட்டுப்பாட்டு பகுதியிலுள்ள பொதுமக்களுக்கு தமிழக அரசு அறிவித்துள்ள கரோனா பாதிப்பு நிவாரண உதவித் தொகை இரண்டாம் தவணையாக தலா ரூ. 2,000, 14 வகையான மளிகைப் பொருள்கள் அடங்கிய தொகுப்பை இப்பகுதிகளுக்கே வந்து வழங்க நடவடிக்கை எடுப்பதாகவும் கூறினாா்.

ஆய்வின்போது, குன்னூா் வட்டாட்சியா் சீனிவாசன், குன்னூா் வட்டார மருத்துவ அலுவலா் ஹாஜிரா பேகம், பேரூராட்சி செயல் அலுவலா்கள் வேணுகோபால், ஜெகநாதன் உள்பட அரசுத் துறை அலுவலா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.