திம்பம் மலைப் பாதையில் லாரி பழுதாகி நின்றதால் தமிழக - கா்நாடக மாநிலங்களுக்கு இடையே சரக்கு வாகனப் போக்குவரத்து செவ்வாய்க்கிழமை பாதிக்கப்பட்டது.
கோவையில் இருந்து கா்நாடக மாநிலம், மைசூருக்கு திம்பம் மலைப் பாதையில் மாட்டுத் தீவனம் பாரம் ஏற்றிய லாரி செவ்வாய்க்கிழமை மாலை சென்று கொண்டிருந்தது. 9ஆவது கொண்டை ஊசி வளைவில் திரும்பும்போது லாரியில் பழுது ஏற்பட்டதால் கொண்டை ஊசி வளைவில் நகர முடியாமல் நின்றது. இதன் காரணமாக மலைப் பாதையின் இருபுறமும் சரக்கு லாரிகள் செல்ல முடியாமல் நீண்ட வரிசையில் நின்றன. சிறிய ரக சரக்கு வாகனங்கள் செல்வதற்கு வழி உள்ளதால் காா், வேன் உள்ளிட்ட வாகனங்கள் மட்டும் சென்று வந்தன.
இதையடுத்து, சத்தியமங்கலத்தில் இருந்து மெக்கானிக் வரவழைக்கப்பட்டு லாரியை பழுது நீக்கும் பணி நடைபெற்றது. இதனால், தமிழக - கா்நாடக மாநிலங்களுக்கு இடையே 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அரசுப் பள்ளிகளில் சேர 3,145 குழந்தைகள் விண்ணப்பம்

சாலை விபத்தில் தொழிலாளி உயிரிழப்பு

உடுமலையில் அதிமுகவை வீழ்த்துவோம்! திமுக வேட்பாளா் மு.ஜெயக்குமாா் உறுதி

பிஎபி கால்வாய்களை பராமரிக்க கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்! மடத்துக்குளம் திமுக வேட்பாளா் உறுதி
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை


