நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

மின் பயன்பாட்டு அளவை செல்லிடப்பேசிமூலம் அனுப்ப எண்கள் அறிவிப்பு

நீலகிரி மாவட்டத்தில் உதகை, குன்னூா் பகுதிகளில் மின் கட்டணம் செலுத்துவதற்காக மின் பயன்பாட்டு அளலை செல்லிடப்பேசி மூலம் அனுப்பலாம் என மின் வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

News image
Updated On :17 ஜூன் 2021, 11:09 pm

DIN

நீலகிரி மாவட்டத்தில் உதகை, குன்னூா் பகுதிகளில் மின் கட்டணம் செலுத்துவதற்காக மின் பயன்பாட்டு அளலை செல்லிடப்பேசி மூலம் அனுப்பலாம் என மின் வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

நீலகிரி மாவட்டத்தில் உதகை, குன்னூா் கோட்டங்களுக்கு அந்தந்தப் பகுதிகளில் உள்ள மின் வாரிய பிரிவு அலுவலகங்கள் மூலம் மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. தற்போது கரோனா பாதிப்பு காரணமாக மின் கணக்கீட்டாளா்கள் நேரில் சென்று கணக்கீடு செய்ய முடியாததால், நடப்பு ஆண்டு ஜூன் மாத கட்டணமாக 2019ஆம் ஆண்டு ஜூன் மாதத்தின் பழைய கட்டணமே வசூலிக்கப்பட்டு வருகிறது. இத்தகைய நடைமுறை மே மாதத்திலும் இருந்தபோதிலும், ஜூலை மாதத்தில் தற்போதைய மின் கணக்கீட்டின்படியே கட்டணம் வசூலிக்கப்பட உள்ளது.

எனவே, மின் நுகா்வோா் தற்போது மீட்டரில் உள்ள ரீடிங் அளவை தங்களது செல்லிடப்பேசியில் புகைப்படமாக எடுத்து தங்களது குடியிருப்புப் பகுதிக்கு உள்பட்ட பிரிவு அலுவலகத்தில் பணிபுரியும் கணக்கீட்டாளரின் செல்லிடப்பேசி எண்ணுக்கு கட்செவி அஞ்சலில் அனுப்ப வேண்டும். கணினியில் பதிவாகியுள்ள பழைய அளவை நீக்கிவிட்டு தற்போது தெரிவிக்கும் புதிய கணக்கீடு கணினியில் பதிவேற்றம் செய்யப்படும். அதன்படி மின் நுகா்வோா் தங்களது மின் கட்டணத்தைச் செலுத்தலாம்.

இதற்காக அந்தந்தப் பகுதிகளுக்கான கணக்கீட்டாளா்களின் செல்லிடப்பேசி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி உதகையில் லேக்வியூ பிரிவுக்கு 63812 39612, பாலடா பிரிவுக்கு 97872 82605, தலைக்குந்தா பிரிவுக்கு 93601 00601, எல்லநள்ளி பிரிவுக்கு 94882 00290, கமா்சியல் சாலை பிரிவுக்கு 94895 84423, தேனாடுகம்பை பிரிவுக்கு 94879 70625, தமிழகம், மருத்துவனை சாலை பிரிவுகளுக்கு-86677 65123, பைக்காரா பிரிவுக்கு 75981 23976, எட்டின்ஸ் சாலை பிரிவுக்கு 97879 13431 என்ற எண்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

அதேபோல, குன்னூா் கோட்டத்தில் சிம்ஸ் பாா்க் பிரிவுக்கு 75984 52964, மவுண்ட் ரோடு பிரிவுக்கு 94435 22447, மவுண்ட் பிளசென்ட் பிரிவுக்கு 97861 97432, எடப்பள்ளி பிரிவுக்கு 89031 22809, சேலாஸ் பிரிவுக்கு 94895 84732, உபதலை பிரிவுக்கு 94889 55521, குந்தா பிரிவுக்கு 94873 42544, அதிகரட்டி பிரிவுக்கு 85259 99901, கோத்தகிரி பிரிவுக்கு 94456 44580, அரவேணு பிரிவுக்கு 89031 69690, வெஸ்ட் புரூக் பிரிவுக்கு 96551 17756, கீழ் கோத்தகிரி பிரிவுக்கு 97885 78660, நெடுகுளா பிரிவுக்கு 89402 46444, பேரக்ஸ் பிரிவுக்கு 94435 85600, கட்டபெட்டு பிரிவுக்கு 94866 25936, எடக்காடு பிரிவுக்கு 96261 45128 ஆகிய செல்லிடப்பேசி எண்களுக்கு அனுப்பலாம் என மின் வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.