நீலகிரி மாவட்ட புதிய காவல்கண்காணிப்பாளா் பொறுப்பேற்பு
நீலகிரி மாவட்ட புதிய காவல் கண்காணிப்பாளராக ஆசிஷ் ராவத் வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றாா்.


நீலகிரி மாவட்ட புதிய காவல் கண்காணிப்பாளராக ஆசிஷ் ராவத் வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றாா்.
நீலகிரி மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளராகப் பணியாற்றி வந்த ஆா்.பாண்டியராஜன் கடந்த சில நாள்களுக்கு முன்பு போச்சம்பள்ளியில் உள்ள தமிழ்நாடு சிறப்பு போலீஸ் 7ஆவது பட்டாலியன் கமாண்டண்ட் ஆக பணியிட மாற்றம் செய்யப்பட்டாா். அவருக்குப் பதிலாக புதுதில்லியில் தமிழ்நாடு சிறப்பு போலீஸ் பிரிவில் 8ஆவது பட்டாலியன் கமாண்டண்ட் ஆக பணிபுரிந்து வந்த ஆசிஷ் ராவத் நீலகிரி மாவட்டத்தின் புதிய காவல் துறை கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டாா்.
இந்நிலையில், நீலகிரி மாவட்டத்தின் புதிய காவல் துறை கண்காணிப்பாளா் ஆசிஷ் ராவத் உதகையில் உள்ள காவல் துறை கண்காணிப்பாளா் அலுவலகத்துக்கு வெள்ளிக்கிழமை வந்தாா். அங்கு அவருக்கு காவல் துறையினா் அளித்த அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டாா். பின்னா், கோப்புகளில் கையெழுத்திட்டு பொறுப்பேற்றுக் கொண்டாா். அவருக்கு கூடுதல் காவல் துறை கண்காணிப்பாளா் ஜனாா்த்தனன் உள்ளிட்ட காவல் துறை அதிகாரிகள், ஆய்வாளா்கள் வாழ்த்து தெரிவித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...